உள்ளடக்கத்துக்குச் செல்

படச்சுருள் வேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படச்சுருள் வேகம் (film speed) படச்சுருளின் ஒளிக்கான உணர்திறனை அளவிடப் பயன்படுகிறது. இது பல்வேறு எண் அளவீடுகளில் அளவிடப்படுகிறது. மிகவும் சமீபத்தியது ISO அமைப்பு ஆகும்.

நெருங்கிய தொடர்புடைய ISO அமைப்பு டிஜிட்டல் இமேஜிங் அமைப்புகளின் உணர்திறனை அளவிட பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைந்த படச்சுருளின் குறைந்த வேகச்சுட்டினை கொண்டு, ஒர் உணர்திறன் கூடிய படச்சுருளின் அதே படஅடர்த்தியினை உருவாக்க அதிவெளிப்பாடு தேவைப்படுகிறது, இதனால் பொதுவாக மெதுவான படச்சுருள் எனப்படுகிறது. உணர்திறன் கூடிய படச்சுருள் வேகமான படச்சுருள் எனப்படுகிறது.

எண்ணிம மற்றும் படச்சுருள் ஒளிப்படவியலில், குறைவெளிப்பாடு காரணமாக உயர் உணர்திறனை பயன்படுத்தல் ஒளிப்பட இரைச்சல் ஏற்பட காரணமாகிறது, இது ஒளிப்படத்தின் தரத்தை குறைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படச்சுருள்_வேகம்&oldid=1553570" இலிருந்து மீள்விக்கப்பட்டது