குதிரைத் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குதிரைத்திறன் (horsepower) அல்லது குதிரை வலு எனப்படுவது ஆற்றலை ஓரலகு நேரத்தில் செலவிடும் திறனை அளக்கும் திறனலகுகளில் வழக்கமாகப் பயன்படும் ஓர் ஓலகு ஆகும். பொதுவாக, மின்னியக்கி போன்றவற்றின் திறனனை அளக்கவும், தானுந்து, பேருந்து, மகிழுந்து போன்ற உந்து இயந்திரங்களின் திறனையும் அளக்க குதிரைத்திறன் என்ற அலகு பயன்படுகின்றது. இதைச் சுருக்கமாக HP என்றும் கூறப்படுகின்றது.

1 HP என்பது 746 வாட்டுகள் (0.746 கிலோ வாட்டுகள் (KW)) என்ற மின்திறன் அளவிற்குச் சமம். சில மோட்டார்களில் கெச்.பி அளவு குறிப்பிடப்படாமல் கிலோவாட்டுகள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நீரேற்றி (எக்கி அல்லது பம்பு மோட்டார்) 0.75 கிலோ வாட்டுகள் (KW) எனில் அது ஒரு குதிரைத்திறனுக்குச் (1 HP) சமம் ஆகும்.

சிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவு வரை பல அளவுகளில் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) முதல் ஆயிரக்கணக்கான கெச்.பி (HP) வரையுள்ள மோட்டார்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP)யும் உடைய மோட்டார்களுக்கு "பின்ன அளவு குதிரைத்திறன் மோட்டார்" (Fractional Motor) என்று பெயர். ஒன்றுக்கு குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்ஃசி, மின் ஆட்டுக்கல்கள், குளிர்ப்பெட்டி (ரெஃப்ரிஜிரேட்டர்), காற்றுப்பதனிகள், வீட்டு கிணற்றில் அமைக்கப்படும் நீரேற்றிகள் போன்றவைகளில் "பின்ன குதிரை சக்தி மோட்டார் " (Fractional Motor) தான் இருக்குமென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.

ஒரு 5 கெச்.பி (HP) மோட்டார் எவ்வளவு திறன் தரும் என்பதை கணக்கிட 5*746 ஐ பெருக்கக் கிடைக்கும் 3730 வாட்டுகள் (Watts) மதிப்பு தான் 5 கெச்.பி (HP) மோட்டாரின் திறன் ஆகும். இதை கிலோ வாட்டுகளில் (KW) பெறவேண்டும் என்றால் 1000ல் வகுக்க வேண்டும் (3730/1000) வகுத்துக் கிடைக்கும் மதிப்பு 3.73 கிலோ வாட்டுகள் (KW) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைத்_திறன்&oldid=1553576" இருந்து மீள்விக்கப்பட்டது