உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல் அல்லது அலுவலக திறந்த எக்சு.எம்.எல் (ஆங்கிலம்: Office Open XML/OOXML/OpenXML) என்பது மைக்ரோசாப்ட்டினால் முன்வைக்கப்பட்ட, அலுவலக ஆவணங்களை (அட்டவணைத்தாள், சொற்செயலி, வரைபடங்கள், நிகழ்த்தல்கள்) பிரதிப்படுத்த உருவாக்கப்பட்ட எக்சு.எம்.எல் அடிப்படையிலான கோப்பு வடிவம் ஆகும்.[1] இந்தக் கோப்பு வடிவம் முதலில் Ecma (as ECMA-376) சீர்தரமாகவும், பின்னர் ISO and IEC (as ISO/IEC 29500) சீர்தரமாகவும் வெளிவந்துள்ளது. இது சீர்தரமாக ஆக்கப்பட்ட முறை, இதன் நுட்பக் குறைபாடுகள், இதை மைக்ரோசாப்ட் நிறைவேற்றும் பயன்படுத்தும் முறை தொடர்பாக கடுமையான விமர்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் அலுவலக ஆவணகக் கோப்பு வடிவம் இதுவாகும்.

சீர்தரங்கள்

[தொகு]
  • ECMA 376 - private சீர்தரம் - (ஒப்பிசு 2007) (எழுத/படிக்க)
  • ISO/IEC 29500 Transitional - ஓப்பிசு 2007/2010/2013 (எழுத/படிக்க) - இயல்பிருப்பு
  • ISO/IEC 29500 Strict - ஓப்பிசு 2013 (எழுத/படிக்க)

குறியீடு

[தொகு]
<?xml version="1.0"?>
<?mso-application progid="Word.Document"?>
<w:wordDocument xmlns:w="http://schemas.microsoft.com/office/word/2003/wordml" xmlns:wx="http://schemas.microsoft.com/office/word/2003/auxHint">
	<w:fonts>
		<w:font w:name="Latha">
			<w:panose-1 w:val="020B0604020202020204"/>
			<w:charset w:val="00"/>
			<w:family w:val="Swiss"/>
			<w:pitch w:val="variable"/>
			<w:sig w:usb-0="00100003" w:usb-1="00000000" w:usb-2="00000000" w:usb-3="00000000" w:csb-0="00000001" w:csb-1="00000000"/>
		</w:font>
	</w:fonts>
	<w:body>
		<w:p>
			<w:r>
				<w:rPr>
					<w:rFonts w:ascii="Latha" w:h-ansi="Latha" w:cs="Latha"/>
					<wx:font wx:val="Latha"/>
				</w:rPr>	  
				<w:t>உலகே வணக்கம்!</w:t>
			</w:r>
		</w:p>
	</w:body>
</w:wordDocument>


விமர்சனங்கள்

[தொகு]

மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒப்பிசு மென்பொருட்களில் ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல்லை திறந்த சீர்தரத்துக்கு ஏற்ப நிறைவேற்றவில்லை. மாற்றாக தனியுரிமை கொண்ட கூறுகளையும், பல தற்காலிகக் கூறுகளையும் கொண்டு நிறைவேற்றி உள்ளார்கள். ஒவ்வொரு ஒப்பிசு மென்பொருள் வெளியீடும், வேறு வேறு ஓப்பின் எக்சு.எம்.எல் சீர்தரங்களை நிறைவேற்றுகிறது.[2] இதனால் interoperability தடைபட்டுள்ளது.

அரச பயன்பாடு

[தொகு]

பல நாடுகளில் விண்டோசு இயங்கு தளம், ஒப்பிசு அலுவலக மென்பொருள் ஆகியன பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அண்மைக் காலமாக பிரான்சு, ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல நாடுகள் திறந்த ஆவண வடிவத்தை] பயன்படுத்துவதைச் சட்டமாக்கி உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Q&A: Microsoft Co-Sponsors Submission of Office Open XML Document Formats to Ecma International for Standardization". Microsoft. 2005-11-21.
  2. "Complex singularity versus openness". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-08-13.