உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 639-3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 639-3 (ISO 639-3:2007) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் மூன்றாம் பகுதியாகும். இது உலகின் அனைத்து பேசும் மொழிகளையும் அடையாளப் படுத்தும் வகையில், மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. இந்த சீர்தரம் 05-02-2007 இல் ஐ.எசு.ஓ வினால் வெளியிடப்பட்டது.[1]

இது கணினி பயன்பாட்டில் பல்வேறு மொழிகளை பாவனையில் கொண்டுவர மிகவும் வேண்டிய ஒன்றாகும்.தவிர உலகின் அனைத்து மொழிகளையும்,நடப்பிலுள்ளவை மற்றும் அழிந்தவை,பழையன மற்றும் புதிதாக கட்டமைத்த அனைத்தையும், பட்டியலிட உதவுகிறது.[1] ஆனால்,மீள்கட்டமைக்கப்பட்ட மொழிகள்,() போன்றவை இதில் அடங்காது.[2]

ஐ.எசு.ஓ 639-1மற்றும் ஐ.எசு.ஓ 639-2 தனிமொழிகளின் குறியீடுகளை உள்ளடக்கிய பொதுத்தொகுதி இந்த சீர்தரம்.ஐ.எசு.ஓ 639-1 மற்றும் ஐ.எசு.ஓ 639-2 இரண்டும் தங்கள் குவியத்தை உலக இலக்கியங்கள் எழுதப்பட்ட முக்கிய மொழிகளை அடையாளப்படுத்தின. ஐ.எசு.ஓ 639-2 மொழித்தொகுதிகளையும் தனது வரைவெல்லையில் கொண்டிருந்தது.ஆனால் ஐ.எசு.ஓ 639-3யில் அவ்வாறில்லாததால் இது ஐ.எசு.ஓ 639-2வின் பெரும் தொகுதி எனக் கொள்ள முடியாது.ஐ.எசு.ஓ 639-2 'பி' மற்றும் 'டி'வகைகளை பயன்படுத்துகையில் இதில் 'டி' குறிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு:

மொழி 639-1 639-2 (B/T) வகை 639-3
ஆங்கிலம் en eng தனி eng
ஜெர்மன் de ger/deu தனி deu
அராபிக் ar ara பெருமொழி arb + several others
மின்னன் (zh-min-nan) தனி nan

நடப்பு சீர்தரத்தில் 7589 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.[3]. இவை கீழ்வரும் மூலங்களிலிருந்து பெறப்பட்டன: 639-2 இலிருந்து தனிமொழிகள், 15th பதிப்பிலிருந்து புதுமொழிகள், வரலாற்று வகைகள், பழைமை வாய்ந்த மொழிகள்,மற்றும் en:Linguist Listஇலிருந்து கட்டமைக்கப்பட்ட மொழிகள் தவிர பொது பின்னூட்ட காலவரையில் பரிந்துரைக்கப்பட்டவை.

குறி வெளி

[தொகு]

ஐ.எசு.ஓ 639-3 இலத்தின் மொழியின் மூன்று எழுத்துக்களைக் கொண்ட ஆல்பா-3 குறிவெளியை பாவிப்பதால், இதனைக் கொண்டு 263 = 17,576 மொழிகளையும் மொழித்தொகுதிகளையும் குறியிடலாம்.

ஐ.எசு.ஓ 639-2 நான்கு சிறப்பு குறிகளை வரையறுத்துள்ளது: mul, und, mis, zxx, ஒரு ஒதுக்கப்பட்ட அளவை qaa-qtz (20 × 26 = 520 குறிகள்) மற்றும் 23 இரு பதிப்பு (the B/T codes). இதனால் 520 + 23 + 4 = 547 குறிகளை மற்ற பாகங்களில் பயன்படுத்த இயலாது. மீதம் 17,576 – 547 = 17,029 மட்டுமே பயனிற்கு உள்ளன.

உலகில் தற்சமயம் ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் மொழிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[7]. ஆகையால் இந்த 17,029 குறிகள் போதுமானவையாகும்.

பெருமொழிகள்

[தொகு]

ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் 56 மொழிகள், சீர்தர நோக்கில், "பெருமொழிகள்" என ஐ.எசு.ஓ 639-3 கருதுகிறது.[4].

சில பெருமொழிகளுக்கு 639-3 வரையறுக்கும் தனிமொழி நிலை ஐ.எசு.ஓ 639-2இல் இல்லை, எ-டு:'ara'. மற்றும் சில மொழிகள் 'nor' போன்றவை தமது இரு தனி பாகங்களை (nno, nob) ஏற்கனவே 639-2 இல் கொண்டிருந்தன. அதாவது ஐ.எசு.ஓ 639-2 ஒரு மொழியின் (எ-டு:'ara') கிளைமொழிகள் ('arb') என கருதியதை ஐ.எசு.ஓ 639-3 வேறொரு தறுவாயில் தனிமொழிகள் எனக் கொளகிறது. இது மொழியியலால் வேறுபட்டிருந்தாலும் பேசுகின்ற மக்களால் ஒரேமொழியாக கருதப்படுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் முயற்சியே.எடுத்துக்காட்டாக,

  • பொதுப்படை அரபி, 639-2 [5]
  • சீர்தர அரபி, 639-3 [6]

வரலாறு

[தொகு]

வளர்ச்சிநிலை [1] பரணிடப்பட்டது 2007-05-28 at the வந்தவழி இயந்திரம்:

  • 2006-07-14 இறுதி வரைவு FDIS
  • 2007-02-05 60.60

பயன்பாடுகள்

[தொகு]

பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 ISO 639-3 status and abstract (iso.org)
  2. "Types of individual languages - Ancient languages (sil.org)". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  3. "ISO 639-3 Code Set". Archived from the original on 2008-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  4. "Scope of denotation: Macrolanguages (sil.org)". Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  5. "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: ara". SIL International. Archived from the original on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  6. "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: arb". SIL International. Archived from the original on 2010-10-13. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_639-3&oldid=3546714" இலிருந்து மீள்விக்கப்பட்டது