காட்டுயிர் ஒளிப்படக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பதற்காக ஓர் 500மிமி நீண்ட தூர வில்லை விரைவு ஒளிபாய்ச்சும் கருவி மற்றும் ஒற்றைக்காலியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

காட்டுயிர் ஒளிப்படக்கலை (wildlife photography) அல்லது காட்டுயிர் ஒளிப்படவியல் என்பது காட்டுயிர்களை ஒளிப்படம் எடுக்கும் செயற்பாடாகும்.

காட்டுயிர் ஒளிப்படக்கலை மிகவும் சவால் மிக்க ஒளிப்படக்கலை வகைகளில் ஒன்றாகும். அத்துடன் இதற்கு ஒலி நுட்ப அறிவு, வெளிப்பாட்டை சரியாக பயன்படுத்தல் மற்றும் களதந்திரம் அறிவு என்பன பொதுவாக தேவைப்படும். எ-கா: சில விலங்குகளை அணுதல் கடினமானது. எனவே விலங்கின நடத்தையியல் பற்றிய அறிவு தேவைப்படுகின்றது. அதன் மூலம் அவற்றின் செயற்பாடுகளைக் கொண்டு அவற்றை அறிந்து கொள்ளலாம். சில இனங்களை ஒளிப்படம் எடுக்க அவற்றை மறைந்திருந்து பின் தொடர்தல் அல்லது மறைந்திருத்தல் ஆகிய செயற்பாட்டு அறிவு தேவைப்படலாம்.

காட்டுயிர் ஒளிப்படக்கலைக்கு அடிப்படை உபகரணங்கள் பாவிக்கப்பட்டாலும், வெற்றிகரமான ஒளிப்படத்திற்கு சில பிரத்தியோக உபகரணங்கள் தேவைப்படுகின்றன. பூச்சிகளைப் படமெடுக்க பெரும வில்லை, பறவைகளைப் படமெடுக்க நீண்ட தூர வில்லை, நீர் உயிரிகளைப் படமெடுக்க நீரில் பாவிக்கக்கூடிய கருவிகள் என பிரத்தியோக உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஆயினும் வெற்றிகரமான ஒளிப்படங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதால் ஏற்படும்.

ஒளிப்படக்கலையின் ஆரம்ப காலங்களில் வேகமற்ற வில்லை மற்றும் குறைவான உணரும் புகைப்படச்சுருள்களினால் காட்டுயிர் ஒளிப்படக்கலை ஏறக்குறைய சாத்தியமற்றுக் காணப்பட்டது.[1]

எடுத்துக்காட்டுக்குச் சில படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]