குவியத் தூரம்
ஒளியியல் தொகுதியொன்றின் குவியத் தூரம் (focal length) என்பது, எவ்வளவு வலுவாக அத்தொகுதி ஒளியைக் குவியச் செய்கிறது அல்லது விலகச் செய்கிறது என்பதைக் காட்டும் ஒரு அளவு ஆகும். வளியில், ஒரு ஒளியியல் தொகுதியின் குவியத் தூரம், அத்தொகுதியில் படும் இணையான ஒளிக்கதிர்கள் குவியும் புள்ளிக்கும் (குவியப் புள்ளி) தொகுதிக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கும். ஒளியை விலகச் செய்யும் தொகுதிகளைப் பொறுத்தவரை, இணையாக வரும் ஒளிக்கதிர்கள் விரிந்து செல்லும்போது எப்புள்ளியில் இருந்து வருவதாகத் தோன்றுகிறதோ அப்புள்ளிக்கும், தொகுதிக்கும் இடையிலான தூரமே குவியத் தூரம் ஆகும்.
மெல்லிய வில்லைகள்
[தொகு]வளியில் மெல்லிய வில்லைகளுக்கான குவியத் தூரம் வில்லையின் மையத்துக்கும் குவியப் புள்ளிக்கும் இடையிலான தூரம் ஆகும். குவிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: குவி வில்லை) குவியத் தூரம் நேர்ப் பெறுமானமாக இருக்கும். விரிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: குழி வில்லை) குவியத் தூரம் எதிர்ப் பெறுமானமாக இருக்கும்.
மெல்லிய வில்லையைப் பயன்படுத்தி தொலைதூர ஒளி மூலம் ஒன்றின் விம்பத்தைத் திரையொன்றில் உருவாக்குவது மூலம் அவ்வில்லையின் குவியத் தூரத்தைக் கணிக்க முடியும். திரையில் இருந்து வில்லையின் தூரத்தை மாற்றுவதன் மூலம் திரையில் தெளிவான விம்பம் தோன்றும்படி செய்ய வேண்டும். கீழ்க் காணும் சமன்பாட்டின் மூலம் குவியத் தூரம் f ஐக் கணிக்கலாம்:
இங்கே u ஒளி முதலுக்கும் வில்லைக்கும் இடையிலான தூரம். v வில்லைக்கும் திரைக்கும் இடையில் உள்ள தூரம்.