மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | "சத்யம் சிவம் சுந்தரம்" |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1949 |
வேந்தர் | முனைவர் மிருணாளினி தேவி புயர் |
துணை வேந்தர் | முனைவர் ரமேஷ் கோயல் |
பட்ட மாணவர்கள் | 28000 (2005) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2000 |
அமைவிடம் | , , |
வளாகம் | ஊரகம் |
இணையதளம் | www.msubaroda.ac.in |
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா, (Maharaja Sayajirao University of Baroda) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும். பரோடாவை ஆண்ட மன்னர் மகாராசா சாயாசிராவ் கெயிக்வார்ட் நினைவாக 1949ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் பரோடா அறிவியல் கல்லூரி என அறியப்பட்டிருந்தது.
கலைப் பள்ளி
[தொகு]கலைப் பள்ளிக் இதனுடைய கட்டிட வடிவமைப்பான கும்பாஸ்க்காக (குவிமாடம்) அறியப்படுகிறது. இது பிஜாப்பூரின் கோல் கும்பாஸ் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][2]
கலைப்பிரிவின் கீழ் செயல்படும் துறைகள்:
- தொல்லியல் துறை மற்றும் பண்டைய வரலாறு
- மானுடவியல் துறை
- அரபிக் துறை
- கனடிய ஆய்வுகள் துறை
- பொருளாதார துறை
- ஆங்கிலத் துறை (குஜராத்தில் மிகப் பழமையானது)
- பிரெஞ்சு துறை
- புவியியல் துறை
- செருமனைய துறை
- குசராத்தி துறை
- இந்தி துறை
- வரலாற்றுத் துறை
- சர்வதேச உறவு துறை
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை
- மொழியியல் துறை
- மராத்தி துறை
- பாரசீகத் துறை
- தத்துவத்துறை
- அரசியல் அறிவியல் துறை
- பாளை துறை
- பிராகிருதத் துறை
- ரஷ்ய துறை
- சமஸ்கிருதத் துறை
- சிந்தி துறை
- சமூகவியல் துறை
- பாரம்பரிய சமஸ்கிருத ஆய்வுகள் துறை
- உருது துறை
- மேலாண்மை ஆய்வுகள் துறை
- கல்வி மற்றும் உளவியல் துறை
மேனாள் மாணவர்கள்
[தொகு]1881ஆம் ஆண்டிலிருந்து இயங்கிய அக்கல்லூரியில் அரவிந்தர் மற்றும் முனைவர் சாம் பிட்ரோடா முதலானோர் படித்துள்ளனர். 2009இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1971ஆம் ஆண்டு இங்கு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
- டி. வி. சந்தோஷ்
- தாதாசாகேப் பால்கே
- வினோபா பாவே
- ஹேமலதா தலேசிரா
- ரங் அவதூத்
- மனன் தேசாய்
- அசய் பாட்
- ரீதிகா கெரா[3]
- விஜய் பட்கர்
- பிரதீக் சர்மா
- சங்கர் சுப்பநரசய்ய மந்தா
- சிரேணு பரிக்
- சுதிர்குமார் பராய், இயக்குநர், பிலானி தொழில்நுட்ப பலகலைக்கழகம், பிலானி
ஆசிரியர்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா அலுவல்முறை இணையப்பக்கம் பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- அன்சா மேத்தா நூலகம்
- ↑ "138-year-old landmark: Baroda dome beats Gol Gumbaz in aesthetics". timesofindia.indiatimes.com. timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ "Termites hit century-old Arts, Technology faculty buildings in MSU, Baroda". indianexpress.com. indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
- ↑ http://hss.iitd.ac.in/faculty/reetika-khera
- ↑ "Renowned ceramic artist Jyotsna Bhatt passed away". The Indian Express (in ஆங்கிலம்). 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.