உள்ளடக்கத்துக்குச் செல்

லலித் கலா அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லலித் கலா அகாடமி (அ) தேசிய கலைக் கழகம், (Lalit Kala Akademi அல்லது National Academy of Art) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இது இந்திய கலை, கலாச்சாரம், பண்பாடு, ஓவியம் போன்ற நுண்கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பலதரப்பட்ட கலைஞர்களின் கலை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தச்செய்து அவர்களுக்கென ஒரு தனித்துவ மேடையை அமைத்துக்கொடுக்கிறது. இவ்வமைப்பின் மண்டலக் கிளைகள் புவனேசுவரம், சென்னை, கார்கி (டில்லி) கொல்கத்தா, லக்னோ, சிம்லா ஆகிய இடங்களில் செயற்படுகின்றன[1]

லலிதக் கலா அகாதமி-சென்னை

.

வரலாறு

[தொகு]

1954ம் ஆண்டு இந்திய தலை நகரான புது தில்லியில் இந்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் ரவீந்திர பவனில் அமைந்துள்ளது. சென்னையில் இதன் பிராந்திய அலுவலகம் 14.10.1978ல் கீழ்தளம் கட்டிமுடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் தமிழ்நாடு அரசு 1 ஏக்கர் நிலத்தை 1977ல் ஒதுக்கியது. பிராந்திய அலுவலக செயல்பாடுகளில் (பொருளாதாரம்) 50% மாநில அரசின் பொறுப்பில் உள்ளது. சென்னையில் 1984ல் கலைஞர்களுக்கான பட்டறையும், ஓவிய கலைக்கூடமும் மேல் தளத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

லலித் கலா அகாடமி சென்னையில் "4, கிரீம்ஸ் சாலை, சென்னை-6" யில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து 12 கிமீ தூரத்திலும், மத்திய புகைவண்டி நிலையத்திலுருந்து 4 கிமீ தூரத்திலும், எழும்பூர் புகைவண்டி நிலையத்திலுருந்து 2 கிமீ தூரத்திலும், மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

நோக்கம்

[தொகு]

இந்தியாவில் உள்ள சம காலத்து கலைகளையும், பண்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மற்றும் பல தனி மனிதரிடம் முடங்கிக்கிடக்கும் கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு மேடையை அமைத்துக்கொடுப்பது, கைவினைப் பொருள்களை கண்காட்சி மூலம் விற்பனை செய்து சமூகத்தை வளர்க்க உதவுவது என பல நல்ல நோக்கங்களுக்காகவும் இது செயல்பட்டு வருகிறது.

பிரிவுகள்

[தொகு]
  • 1. கிராபிக் பட்டறை
  • 2. செராமிக் பட்டறை
  • 3. சிற்பப் பட்டறை
  • 4. ஓவிய கலைக்கூடம்
  • 5. நூலக குறிப்புகள்
  • 6. கலைக்காட்சி கூடம்
  • 7. விற்பனை வெளியீடுகள்

பிராந்தியத்தின் விரிவு

[தொகு]

சென்னை பிராந்தியத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பாண்டிச்சேரி, கோவா, லட்சத்தீவு, மற்றும் மகாரஷ்டிரா போன்ற மாநிலங்களும் வருகின்றன .

தயாரிப்புகள்

[தொகு]

பீங்கான் பொருட்கள், கற்சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், மரத்தால் செய்த பொருட்கள், செராமிக் பொருட்கள் மற்றும் பல அரிய பொருட்களும் கிடைக்கின்றன. கலை சம்பந்தமான புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன, இவை விற்பனைக்கு அன்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "லலித் கலா அகாடமி செயற்பாடுகள்". Archived from the original on 2011-10-11. பார்க்கப்பட்ட நாள் 2013-09-14.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_கலா_அகாதமி&oldid=3570116" இலிருந்து மீள்விக்கப்பட்டது