இலட்சத்தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலட்சத்தீவுகள்
Lakshadweep
ஒன்றியப் பகுதி
Location of இலட்சத்தீவுகள்
ஆள்கூறுகள்: 10°36′N 72°36′E / 10.6°N 72.6°E / 10.6; 72.6ஆள்கூற்று: 10°36′N 72°36′E / 10.6°N 72.6°E / 10.6; 72.6
நாடு  இந்தியா
நிறுவப்பட்டது 1 நவம்பர் 1956
நலைநகர் கவரத்தி
அரசு
 • நிருவாகி பாரூக் கான்
 • நா.உ முகம்மது பைசல் (தேசியவாத காங்கிரசு கட்சி)
பரப்பளவு
 • மொத்தம் 32
பரப்பளவு தரவரிசை 36வது
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம் 65,473
 • அடர்த்தி 2
மொழிகள்[1]
 • உரிமைப்படி ஆங்கிலம்
 • நடப்பின்படி மலையாளம்
 • மேலதிகமான மொழி இந்தி
இனம்
 • இனக்குழுக்கள் ≈84.33% மலையாளிகள்
≈15.67% மாகிகள்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு IN-LD
வாகனப் பதிவு LD
மொத்த மாவட்டங்கள் 1
பெரிய நகரம் ஆந்தரோத்
HDI Green Arrow Up Darker.svg
0.796
HDI Year 2005
HDI Category high
இணையதளம் www.lakshadweep.gov.in
இலட்சத்தீவின் வரைபடம்

லட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.

மொழிகள்[தொகு]

இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.

பொருளாதரம்[தொகு]

மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.

போக்குவரத்து மற்றும் சுற்றுலா[தொகு]

அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது.[3] மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.[4]

இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[5] பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (16 July 2014). மூல முகவரியிலிருந்து 8 July 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. Lakshadweep Population Census data 2011
  3. "Kochi to Agatti Flights and their Schedule". Mapsofindia.com (2014-09-08). பார்த்த நாள் 2015-02-25.
  4. "Means of Transport". Union Territory of Lakshadweep. பார்த்த நாள் 1 August 2012.
  5. "Entry Permits". Union Territory of Lakshadweep. பார்த்த நாள் 25 February 2015.
  6. "Introduction to Lakshadweep Islands". The New York Times. பார்த்த நாள் 1 August 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சத்தீவுகள்&oldid=2403996" இருந்து மீள்விக்கப்பட்டது