தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாத்ரா மற்றும் நகர் அவேலி
தாமன் & தியூ
ஒன்றியப் பகுதி
Official logo of தாத்ரா மற்றும் நகர் அவேலி தாமன் & தியூ
இந்திய அரசின் சின்னம்
இந்திய வரைபடத்தில் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ பகுதிகளின் அமைவிடம்
இந்திய வரைபடத்தில் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ பகுதிகளின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°25′N 72°50′E / 20.42°N 72.83°E / 20.42; 72.83ஆள்கூறுகள்: 20°25′N 72°50′E / 20.42°N 72.83°E / 20.42; 72.83
நாடு இந்தியா
நிறுவிய நாள்26 சன்வரி 2020 [1]
தலைமையிடம்தமன்[2]
அரசு
 • Bodyதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவின் ஒன்றிய நிர்வாகம்
 • உயர்நீதிமன்றம்மும்பை உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்603 km2 (233 sq mi)
பரப்பளவு தரவரிசை33
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,85,764
 • அடர்த்தி970/km2 (2,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுTBA
வாகனப் பதிவுDD-01,DD-02,DD-03[3]
மாவட்டங்கள்3 தாத்ரா நகர் அவேலி, தியூ, தமன்
இணையதளம்http://dnh.nic.in/
https://daman.nic.in/

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்ரும் தியூ (Dadra and Nagar Haveli and Daman and Diu, (DNHDD); மேற்கு இந்தியாவின் அமைந்த இந்தியாவின் ஒரு ஒன்றியப் பகுதியாகும் இதன் நிர்வாகத் தலைமையிடம் தமன் நகரம் ஆகும்.

தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை இணைத்து இப்புதிய ஒன்றியப் பகுதியை 26 சன்வரி 2020 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7]

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைக்கு முன்னர் இப்பகுதிகள் கோவா போன்று போர்த்துகேயர்கள் நிர்வாகத்தில் இருந்தது. 1961-ஆம் ஆண்டில் இப்பகுதிகளை போர்த்துகேயர்களிடமிருந்து கைப்பற்றி, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆலோசனையின் படி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 16 சனவரி 2020 அன்று முதல் தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை, ஒன்றாக ஒன்றிணைத்து இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகியின் கீழ் செயல்படுகிறது.

புவியியல்[தொகு]

இந்த ஒன்றியப் பகுதி தொடர்ச்சியற்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்த ஒன்றியப் பகுதியின் நிலப்பரப்புகள் குஜராத் மாநிலக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இந்த ஒன்றியப் பகுதி டையு (தியூ), டாமன் (தமன்) மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிகக்ப்பட்டுள்ளது. இதில் டையு (தியூ) மட்டுமே தீவுப் பகுதியாகும்.

மாவட்டங்கள்[தொகு]

வ எண் மாவட்டம் பரப்பளவு
км²
மக்கள்தொகை
(2011)
அடர்த்தி
per/км²
இணையதளம்
1 தமன் மாவட்டம் 72 190 855 2650 http://www.daman.nic.in/
2 தியூ மாவட்டம் 40 52 056 1301 http://diu.gov.in/
3 தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் 491 342 853 698 http://dnh.nic.in/
மொத்தம் 603 585 764 970

அரசியல்[தொகு]

இந்த ஒன்றியத்தில் தாத்ரா நகர அவேலி மற்றும் தாமன் தியூ என இரண்டு மகக்ளவைத் தொகுதிகள் உள்ளது.

உயர் நீதிமன்றம்[தொகு]

இந்த ஒன்றியப் பகுதிகளின் நீதிமன்றங்கள், மும்பை உயர் நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]