அகத்தி வானூர்தித் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகத்தி வானூர்தி தளம்
Agatti Aerodrome
Agatti Airstrip.jpg
அகத்தி வானூர்தி தளத்தின் வான்வழி காட்சி
ஐஏடிஏ: ஏஜிஎக்சு (AGX)ஐசிஏஓ: விஓஏடி (VOAT)
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.Location of AGX in India
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
இயக்குனர் இந்திய விமான ஆணையம்
சேவை புரிவது லட்சத்தீவு, இந்தியா
அமைவிடம் அகத்தி தீவு
உயரம் AMSL 14 ft / 4 m
ஆள்கூறுகள் 10°49′41″N 72°10′44″E / 10.82806°N 72.17889°E / 10.82806; 72.17889
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
04/22 4 1,291 நிலக்கீல்

அகத்தி (அகட்டி) வானூர்தித் தளம் (Agatti Aerodrome) இது, புவிக்கோள ஆசியா கண்டத்தின் இந்திய எல்லையான லட்சத்தீவு ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது. இது, சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்க வானூர்தி தள குறியீட்டின்படியும் ஐஏடிஏ (IATA: AGX), சர்வதேச சிவில் வானூர்தி போக்குவரத்து அமைப்பு குறியீட்டின்படியும் ஐசிஏஓ (ICAO: VOAT), இந்தியாவின் தென்மேற்கு கடற்பகுதியில் உள்ள, தீவு தொகுப்புகளில் ஒன்றான அகத்தி தீவின் தென்கோடியில், கடல்சூழ் ஓடுதடமாக உள்ள, ஒரே (Single) வானூர்தி ஓடுபாதையாக அமைக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்த வானூர்தி ஓடுபாதை, டோர்னியர் 228 (Dornier 228) வகை வானூர்திக்காக 1987-1988 ஆம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டு, 1988, ஏப்ரல் 16 ஆம் நாள் திறக்கப்பட்டது.[2] தொடக்கத்தில், இம்முனையத்தில் ஒரு சிறிய தற்காலிக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பின்பு 2006 இல், முனைய கட்டிடம், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், மற்றும் அதன் தொடர்பான கட்டமைப்பு கட்டுமானங்கள் தொடங்கப்பட்டது. எனினும் முனைய கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, ஓடுபாதையின் அடிப்படை தேவையின் காரணமாக அப்பணி மட்டும் நீட்டிக்கப்பட்டது.[3] 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 இல், ஏர் இந்தியா பிராந்தியம், ஏடிஆர் 42 (Air India Regional, ATR-42) எனும் வானூர்தி மூலம், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, அகத்தியை இணைக்கும் வான்வழி சேவை தொடங்கியது.[3] மேலும், அகத்தி வானூர்தி தளத்தின் ஓடுபாதை கட்டுமான பணிகள், 2010, நவம்பரில் முடிக்கப்பட்டது.[4]

கட்டமைப்பு[தொகு]

அகத்தி வானூர்தி நிலையம், 18,56 எக்டேர் (Hectares) (45.9 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்டது.[5] 1204 மீட்டர் (3950.131 அடி) நீளமும், 3௦ மீட்டர் (98.4252 அடி) அகலமும் கொண்ட வானூர்தியின் ஓடுபாதை, ஒரு நீலக்கீல் வடிவமாகவும், ௦4/22 நோக்குநிலையாக அமைக்கப்பெற்றது. அதன் முனைய கட்டிடம் உரிய நேரத்தில் 5௦ பயணிகளை[6] கையாளும் வகையில் உள்ள இவ்வானூர்தி தளம், தூரம் அளவிடும் உபகரணங்களாலும் (Distance Measuring Equipment(DME), திசையற்ற ஒளிவிளக்கு (Non-Directional Beacon(NDB) கருவிகளையும் கொண்டு, இந்திய விமான ஆணையத்தால் (Airports Authority of India(AAI) இயக்கப்படுகின்றன.[7]

விரிவாக்கம்[தொகு]

அகத்தி வானூர்தி தளத்தை நீட்டிக்க, இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம், மற்றும் ஏஏஐ (AAI) முறையான சுற்றுசூழல் அனுமதி பெற்று, 1500 அடி (457.2 மீட்டர்) கடல் மீது, ஓடுபாதை அமைக்க பாலத்திற்கு அடிக்கற்கள் பொதியப்பட்டது.[8] இவ்வோடுபாதை, ஏடிஆர்-72 (ATR-72) வகையை போன்ற வானூர்திகள் தள்ளு சுமையற்ற, மற்றும் இயக்க ஏதுவாக 3௦௦ கோடி ரூபாய் (Indian Rupee symbol.svg 300 crore) மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது.[9] இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (AAI, ஆரம்பத்தில் ஏர்பஸ் ஏ-320 (Airbus A-320) அல்லது போயிங் 737 (Boeing 737) வகையான வானூர்திகளைக் கையாள ஏதுவாக, அகத்திக்கும் (Agatti), குடியேற்றமல்லாத கல்பட்டி (Kalpati) தீவுகளிடையே ஒரு நெடிய பாலமுடனான ஓடுபாதை அமைக்க திட்டமிடபட்டது.[10] எனினும், கடலாமைகள் நிறைந்த கல்பட்டி தீவுப்பகுதி முழுவதும் சமனிலை பணிகளாலும், சுற்றுசூழல் அடிப்படையிலும், நிராகரிகப்பட்டு நெடிய ஒடுதள திட்டம் கைவிடப்பட்டது.[11]

திருத்தியமைக்கப்பட்ட முழுத் திட்டத்தின்படி, பின்வரும் படைப்புகளில் மேற்கொள்ளப்படும்
  • இவ்வோடுபாதை, இருதீவுகள் ஒன்றோடொன்று இணைப்பின்றி கல்பட்டி தீவு நோக்கி காயல் மீது தென்மேற்கு திசையில் 336 மீட்டர் நீட்டிக்கபட்டது.
  • புதிய முனைய கட்டிடம், வானூர்தி கட்டுபாட்டு கோபுரம், தொழில்நுட்ப பகுதி மற்றும் தீயணைப்பு நிலையம் வடமேற்கு திசையில் அமைக்கப்பட்டது.
  • முழுமையாக குளிரூட்டப்பட்ட முனைய கட்டிடம், 2250 சதுரமீட்டர்கள் கொண்டது, ஒரே நேரத்தில் 150 பயணிகள் தங்கும்படியாக உள்ளது.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஏயர் இந்தியா பிராந்தியம் கேம்பேகோவடா சர்வதேச விமான நிலையம்
பெங்களூர்,[12] கொச்சி சர்வதேச விமான நிலையம் கொச்சி

உசாத்துணை[தொகு]


உப ஊடகங்கள்[தொகு]