குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 34°08′09″N 077°32′47″E / 34.13583°N 77.54639°E / 34.13583; 77.54639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம்
IXL Front 2010.jpg
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுலே
அமைவிடம்லே, சம்மு காசுமீர், இந்தியா
உயரம் AMSL3,256 m / 10,682 ft
ஆள்கூறுகள்34°08′09″N 077°32′47″E / 34.13583°N 77.54639°E / 34.13583; 77.54639
நிலப்படம்
IXL is located in ஜம்மு காஷ்மீர்
IXL
IXL
IXL is located in இந்தியா
IXL
IXL
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
07/25 2,752 9,028 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2016 - மார்ச்சு 2017)
பயணிகள்563800 (Green Arrow Up Darker.svg38.0%)
வானூர்தி இயக்கங்கள்4904 (Green Arrow Up Darker.svg42.8%)
சரக்கு டன்கள்1665 (Green Arrow Up Darker.svg15.5%)
மூலம்: ஏஏஐ[1] [2] [3]

குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம் ( Kushok Bakula Rimpochee Airport, (ஐஏடிஏ: IXLஐசிஏஓ: VILH)) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் லே நகருக்கான வானூர்தி நிலையமாகும். உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள வணிக வானூர்தி நிலையங்களில் கடல்மட்டத்திலிருந்து 3,256 m (10,682 ft) உயரத்தில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் 22ஆம் இடத்தில் உள்ளது. இந்த வானூர்தி நிலையக் களத்திற்கு பார்வைத்தொலைவில் இசுப்பைதுக் புத்தவிகாரம் அமைந்துள்ளது; இதன் தலைமை குருவும் இந்திய பேராளருமான 19ஆவது குசோக் பகூலா ரிம்போச்செயின் பெயரே இந்த வானூர்தி நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

மதியத்திற்குப் பின்னர் மலைக்காற்று வீசுவதால் அனைத்து வான்பறப்புகளும் காலை நேரத்திலேயே இயக்கப்படுகின்றன. வானூர்திஇறங்குவதற்கான அணுக்கம் மிகவும் சவாலானது. ஒரே திசையிலான ஓடுபாதையின் கிழக்கு முனையில் தரை உயரமாக உள்ளது. வானூர்தி நிலைய பாதுகாப்பு இந்தியத் தரைப்படையால் கையாளப்படுகின்றது. வான்பயணத்தில் கைப்பெட்டிகள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.

இமாலய மலைகளினிடையே அமைந்துள்ள லே வானூர்தி நிலையத்தின் அணுக்கம் உலகில் மிகவும் மிகச்சிறந்த அழகுடை காட்சிகளைத் தரும் அணுக்கமாக நியமிக்கப்பட்டுள்ளது. [4].

பெப்ரவரி 2016இல் [இந்திய வான்படை]] இந்த வானூர்தி நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திடம் ஒப்படைத்தது. வானூர்தி நிலைய ஆணையம் இதனை விரிவுபடுத்தி குடிசார் பறப்புகளுக்குப் பயன்படுத்தும். [5]

வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்[தொகு]

இமய மலைகளிடையே குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம் (IXL) லே, சம்மு & காசுமீர், இந்தியா
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாசண்டிகர், தில்லி, சென்னை, சம்மு, சிறீநகர்
ஸ்பைஸ் ஜெட்தில்லி (மே 1, 2018 முதல்)
கோஏர்தில்லி, மும்பை, சிறிநகர்
ஜெட் ஏர்வேஸ் தில்லி
விஸ்தாராதில்லி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. 28 April 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. 28 April 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Traffic News for the month of March 2017: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 27 April 2017. p. 3. 28 April 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. Oscar Boyd (2017-10-21), Highest Airports in the World: Landing in Leh (Air India) | 4K, 2017-10-21 அன்று பார்க்கப்பட்டது
  5. IAF to vacate Leh airport, to develop base at alternate site