உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IDRஐசிஏஓ: VAID), இந்தோரில் உள்ள ஒரு பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வானூர்தி நிலையாமாகும். மத்தியப் பிரதேசத்தின் உள்ள இவ்வானூர்தி நிலையம் இந்தோருக்கு 8 கிமீ. மேற்கே அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் கணக்குப்படி, இது இந்திய வானூர்தி நிலையங்களின் தரவரிசைப்படி, வானூர்திகள் மேலாண்மையிலும், பராமரிப்பிலும் இந்திய அளவில் 20-வது[1] இடத்தில் உள்ளது. 

இவ்வானூர்தி நிலையத்திற்கு, மராட்டியப் பேரரசின் ஓல்கர் வம்சத்தைச் சார்ந்த பேரரசி அகில்யாபாய் ஓல்கர் நினைவால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2008 முதல் ஹஜ் புனித பயனத்திற்கு இந்தோரிலிருந்து செல்பவர்கள் இவ்வானூர்தி நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

வரலாறு

[தொகு]

ஓல்கர் அரசு, நெவில் வின்சென்ட் உடனும் டாடா குழுமத்தினருடனும் கூட்டாய்வு செய்து, பிசாசன் இடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க 1935-ம் ஆண்டு முடிவு செய்தனர்.  இந்தோரிலிருந்து குவாலியர் Aவரையிலுமான வானூர்தி சேவை சூலை 1948-ல் துவங்கியது. ஏப்ரல் 1950-ம் ஆண்டு மத்திய நிதி மேலாண்மை அடிப்படையில் இவ்வானூர்தி நிலையம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய வானூர்திகள் பயனிப்பதற்கு ஏதுவாக 1966-ம் ஆண்டு 5600 அடிகள் கொண்ட புதிய வானூர்தி தளம்  15 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. இரவு நேரங்களில் தரையிறங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.[2]

வானூர்தி சேவை

[தொகு]

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. , AAI Traffic News.
  2. Madhya Pradesh district gazetteers, Volume 17. பார்க்கப்பட்ட நாள் 10 July 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]