மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 24°37′04″N 073°53′46″E / 24.61778°N 73.89611°E / 24.61778; 73.89611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்

சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஉதயப்பூர்
அமைவிடம்தபோக்
உயரம் AMSL513 m / 1,684 ft
ஆள்கூறுகள்24°37′04″N 073°53′46″E / 24.61778°N 73.89611°E / 24.61778; 73.89611
இணையத்தளம்www.aai.aero
நிலப்படம்
UDR is located in இராசத்தான்
UDR
UDR
இராஜஸ்தானில் வானூர்தி நிலையம் அமைவிடம்
UDR is located in இந்தியா
UDR
UDR
UDR (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08/26 2,743 9,000 Asphalt
புள்ளிவிவரங்கள் (April 2017 - March 2018)
பயணிகள்1147067 (5.2)
விமானப் போக்குவரத்து9842 (8.3)
Source: AAI[1][2][3]
4 இருக்கைகள் கொண்ட பைப்பர் வானூர்தி 1957ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மகாராணா பிரதாப் வானூர்தி நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.

மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்[4] (Maharana Pratap Airport) என்பது இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள உதயப்பூருக்கு வானூர்தி சேவை செய்யும் விமான நிலையமாகும். இது உதயப்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கிழக்குப் பகுதியில் உள்ள தடபோக்கில் அமைந்துள்ளது.

வடமேற்கு இந்தியாவில் உள்ள மேவார் மாகண மகாராணா (ஆட்சியாளர்) மகாராணா பிரதாப்பின் நினைவாக இந்த விமான நிலையம் பெயரிடப்பட்டது.

1957ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி விமானி அசுதோசு திவாரியால் 4 இருக்கைகள் கொண்ட இலகுரக வானூர்தி தரையிறக்கப்பட்ட போது இந்த விமான ஓடுதளம் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.[5][6] வானூர்தி நிலையத்தின் புதிய பயணிகள் முனையம் பிப்ரவரி 2008 முதல் செயல்படத் தொடங்கியது.

கட்டமைப்பு[தொகு]

உதயப்பூர் வானூர்தி நிலையம் 504 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4] வானூர்தி நிலையம் 08/26, 9000 அடி/ 2743 மீட்டர் நீளம் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்ட ஒரு நிலக்கீல் ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இதன் 250 க்கு 150-மீட்டர் ஓடுபாதையில் ஒரே நேரத்தில் 3 போயிங் 737 அல்லது ஏர்பஸ் ஏ320 விமானங்களுக்கு நிறுத்தும் இடத்தை வழங்குகிறது. புதிய முனையக் கட்டிடம், 12175 சதுர மீட்டர் பரப்பளவில், 800 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. முனையத்தில் இரண்டு பயணம் செய்யக்கூடிய பாதைகள், 4 பயணிச் சோதனையிடல்களுடன் 600 பயணிகளைக் கையாளக் கூடிய திறனுடன் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தொலைவு அளக்கும் கருவிகள், அதி உயர் அதிர்வெண் பலதிசை வரம்பு மற்றும் திசை அல்லாத கலங்கரை விளக்கங்கள் போன்ற நவீன வழிசெலுத்தல் மற்றும் தரையிறங்கும் கருவிகள் உள்ளன. ஓடுபாதை 26யில் கேஏடி-I வானொலி அலை இறங்கு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.[7]

விமான நிறுவனங்கள் மற்றும் இலக்குகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்Refs.
ஏர் இந்தியாஅவுரங்காபாத், தில்லி, மும்பை[8][9]
இன்டிகோபெங்களூரு, தில்லி, ஐதராபாத்து, கொல்கத்தா,[10] மும்பை[11]
ஸ்பைஸ் ஜெட்அகமதாபாது,[12] பெங்களூரு,[12] தில்லி, செய்ப்பூர் , கொல்கத்தா,[12] மும்பை[12][13][14]
விஸ்தாராதில்லி, மும்பை[15]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Traffic News for the month of March 2019: Annexure-III" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
 2. "Traffic News for the month of March 2019: Annexure-II" (PDF). Airports Authority of India. 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
 3. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
 4. 4.0 4.1 "Airport website". Archived from the original on 18 April 2012. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
 5. "Udaipur's first pilot". The Times of India (in ஆங்கிலம்). July 31, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.
 6. "For the first time, a plane passing through Jaipur had reached Udaipur's Dabok airport, Tiwari had a dialogue with everyone from Rajiv Gandhi to Narendra Modi. | पहली बार जयपुर से गुजर विमान उदयपुर के डबोक हवाई अड्डे लेकर पहुंचे थे तिवारी, राजीव गांधी से लेकर नरेंद्र मोदी तक सभी से था आशुतोष का संवाद". NewsJoJo (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.
 7. "Airport website, Tech info". Archived from the original on 7 June 2012. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
 8. "Timetable" (PDF). Air India. 1 January 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
 9. "Air India to commence Udaipur-Aurangabad service in Oct-2019". CAPA. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
 10. "IndiGo New Flights Information". IndiGo. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
 11. "Flight Schedule for Domestic & International Flights". IndiGo. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
 12. 12.0 12.1 12.2 12.3 "SpiceJet's Flights Schedule and Information for domestic and international flights". பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
 13. "SpiceJet flight schedules: Domestic". SpiceJet. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
 14. "Spicejet increases focus on Jaipur, to launch flights to Udaipur, Amritsar, Dehradun". 31 January 2021.
 15. "Vistara to launch Jodhpur and Udaipur flights". Vistara. பார்க்கப்பட்ட நாள் 9 September 2019.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]