கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் முன்னைய பெயர் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் பெயரைக் கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியதையடுத்து, பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.

இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஹொங் கொங், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian National Flag at Kempegowda International Airport, Bengaluru

மேற்கோள்கள்[தொகு]


வெளியிணைப்புகள்[தொகு]