குவாலியர் வானூர்தி நிலையம்
இராஜமாதா விஜய ராஜீ சிந்தியா முனையம், குவாலியர் வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம்/பொது | ||||||||||||||
உரிமையாளர் | இந்திய வான்படை | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை/இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | குவாலியர், மோரினா, பிகிந், தாதியா, தாப்ரா, சிவ்பூர், ஜான்சி, தோலாப்பூர், ஆக்ரா, செப்பூர், குணா, எடாவா, ஒர்ச்சா | ||||||||||||||
அமைவிடம் | குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||
உயரம் AMSL | 617 ft / 188 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 26°17′36″N 078°13′40″E / 26.29333°N 78.22778°Eஆள்கூறுகள்: 26°17′36″N 078°13′40″E / 26.29333°N 78.22778°E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|
குவாலியர் வானூர்தி நிலையம் (Gwalior Airport) (ஐஏடிஏ: GWL, ஐசிஏஓ: VIGR) எனும் பொது வானூர்தி நிலையம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வடகிழக்கே 10 km (6 mi) தொலைவில் மகராஜபூர் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ளது. இது மத்தியப் பிரதேசத்தின் ஆறு விமான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மத்தியப் பிரதேசத்தின் நான்காவது பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் 760 ஏக்கர்கள் (310 எக்டேர்கள்) பரப்பில் அமைந்துள்ளது. அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் குவாலியருக்கு விமானச் சேவைகளை இயக்குகின்றன.
புள்ளிவிவரம்[தொகு]
விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
அலையன்ஸ் ஏர் | தில்லி, இந்தூர் |
ஸ்பைஸ் ஜெட் | அகமதாபாத்,[1] பெங்களூர், ஐதராபாத், ஜம்மூ,[1] கொல்கத்தா, மும்பை,[1] புனே[1] |
அமைப்பு[தொகு]
இந்த விமான நிலையம் 760.7 ஏக்கர்கள் (307.8 எக்டேர்கள்) பரப்பில் ஒரு முனையத்தில் மணிக்கு 350 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 100-by-150-மீட்டர் (330 ft × 490 ft) ஏப்ரன் இரண்டு ஏர்பஸ் ஏ 320 மற்றும் ஒரு சிறிய விமானத்தை ஒரே நேரத்தில் கையாளும் திறனுடையது.[2] குவாலியர் விமானத் தளம் இரண்டு செயல்பாட்டிற்கான இணையான ஓடுபாதைகளைக் கொண்ட விமானப்படைத் தளமாகும். இரண்டாவது ஓடுபாதை பிப்ரவரி 2009 இல் கட்டப்பட்டு, அக்டோபர் 2010 இல் செயல்பாட்டுக்கு வந்தது.
விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்[தொகு]
- மே 6, 2021 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பீச் கிராஃப்ட் 250 விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மூன்று விமானப் பணியாளர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரெம்டெசிவியர் ஊசி மருந்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "SpiceJet schedule". SpiceJet. 14 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ AAI website, 7 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது, 10 January 2012 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Tomar, Shruti (May 7, 2021). "Plane carrying Remdesivir injections crash lands in MP’s Gwalior". The Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/plane-carrying-remdesivir-injections-crash-lands-in-mp-s-gwalior-101620327054221.html.