குணா
குணா | |
---|---|
![]() திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | சுவாதி சித்ரா இன்டர்நேஷனல் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | வேணு |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 05 நவம்பர் 1991 |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
குணா (Gunaa) 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் குணா என்ற பெயரே இறுதியாக வைக்கப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மலை காடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.[2]
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மன நோயாளியான குணா (கமல்ஹாசன்) கவிதை ஆற்றல் மிக்கவராவார்.விலை மாதுவாக தொழில் செய்யும் தனது தாயையும் தனது குடும்பத்தாரையும் வெறுக்கும் குணா கனவு தேவதையொருவரைப் பற்றியே உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்கின்றார். அப்பெண்மணிக்கு அபிராமி எனப் பெயரிட்டு அவர் தனக்குக் காதலியாகக் கிடைப்பாரென்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் குணா. அதே சமயம் அவரது தீய மனம் படைத்த நண்பனால் கோயில் உண்டியல் பணத்தினைக் கொள்ளையடிக்கவும் ஒப்புக் கொள்கின்றார். அக்கோயிலுள் ஒரு அழகிய பெண்ணையும் காண்கின்றார் அவரே தனது அபிராமி என நினைத்து தன்னுடன் கடத்திச் செல்கின்றார். ஒரு மலை உச்சியில் தங்கியிருந்து அவர் தன் கனவுக்கன்னி எனக்கருதிய அபிராமியை மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்கின்றார்.
இவர் காட்டும் அன்பைப் பாராது பலமுறை அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றார். ஆனாலும் தோற்றுப் போகின்றார். இதற்கிடையில் அப்பெண்ணின் தந்தையின் நண்பன் அப்பெண்மணியின் சொத்துக்கள் அனைத்தினையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அவளைக் கொலை செய்ய முயல்கின்றான். ஆனால் குணா அவளைக் காப்பாற்றி மலைக் குகைக்குள் கொண்டு சேர்க்கின்றான். இதற்கிடையில் இருவருக்கும் காதல் மலர்கின்றது. ஆனால் அப்பெண்மணியைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள் குணாவை அழைக்கின்றனர் ஆனால் அவன் அவர்களின் பேச்சுக்களைக் கேட்க மறுக்கின்றான். அதே சமயம் அங்கு வரும் குணாவின் காதலியின் சொத்துக்களை அடைய விரும்பியவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான். தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கின்றார்.
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன் - குணா[3]
- ரேகா - ரோசி[4]
- ரோசினி - ரோசினி (பார்வதி)
- சனகராஜ் - சித்தப்பா[4]
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - இராமையா[5]
- கிரீஷ் கர்னாட் - கணேஷ்[6]
- சரத் சக்சேனா - சுரேஷ் குமார் (எஸ். கே.)[4]
- பிரதீப் சக்தி - இஸ்மாயில்[7]
- அனந்து
- சேது விநாயகம் - மருத்துவர்[8]
- அஜய் ரத்னம் - மூவேந்தர்[9]
- எஸ். வரலட்சுமி - மனோன்மணி[4]
- காகா இராதாகிருஷ்ணன் - மாடசாமி
- ஆர். எஸ். சிவாஜி - முடி ஒப்பனையாளர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[10] வசனம், பாடல் வரிகளுக்காகப் பெயர் பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு மைல்கல்லாக மாறியது.[11][4] "பார்த்த விழி" என்ற பாடல் கருநாடக பாவனி இராகத்தில் அமையப் பெற்றது.[12][13]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "அப்பனென்றும் அம்மையென்றும்" | வாலி | இளையராஜா | 4:39 | ||||||
2. | "உன்னை நானறிவேன்" | வாலி | எஸ். ஜானகி, சுல்தான் கான் | 7:05 | ||||||
3. | "பார்த்தவிழி பார்த்தபடி" | அபிராமி பட்டர், வாலி | கே. ஜே. யேசுதாஸ் | 2:33 | ||||||
4. | "கண்மணி அன்போடு காதலன்" | வாலி | கமல்ஹாசன், எஸ். ஜானகி | 5:27 | ||||||
5. | "உன்னை நானறிவேன் (சிறிய பாடல்)" | வாலி | எஸ். வரலட்சுமி | 0:38 | ||||||
6. | "ஒய்லாலோ ஒய்லாலோ" | — | குழுவினர் | 1:57 | ||||||
மொத்த நீளம்: |
22:19 |
விருதுகள்
[தொகு]- 1991 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்காக மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
39வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் (1992)
- 1991 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
வகை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna | 25th year celebration of guna movie" (in ta). ஆனந்த விகடன். 5 November 2016 இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190114153359/https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/71473-25th-year-celebration-of-guna-movie.html.
- ↑ "’குணா’ குகையை மறக்கவே முடியாது: சந்தான பாரதி நினைவுகள்". இந்து தமிழ். 20 February 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/155313-.html.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 502.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Dhananjayan 2011, ப. 145.
- ↑ "18 times 'actor' SP Balasubrahmanyam wowed Kollywood buffs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 September 2020. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ Rangan, Baradwaj (17 June 2019). "Remembering Girish Karnad the director, the actor". அனுபமா சோப்ரா. Archived from the original on 11 July 2020. Retrieved 11 July 2020.
- ↑ "பிரபல வில்லன் நடிகர்பிரதீப் சக்தி மரணம்" (in Ta). தினமலர். 21 February 2016 இம் மூலத்தில் இருந்து 13 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200713225144/https://www.dinamalar.com/news_detail.asp?id=1462345.
- ↑ "Gunaa Cast and Crew". Moviefone. Archived from the original on 26 April 2021. Retrieved 26 April 2021.
- ↑ Dhananjayan 2011, ப. 146.
- ↑ "Guna". Gaana. Archived from the original on 5 September 2020. Retrieved 11 July 2020.
- ↑ Subramanian, Karthik; Lakshmi, K. (24 October 2014). "Jigarthanda follows Kamal's path". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205100050/http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/tinsel-town-jigarthanda-follows-kamals-path/article6528428.ece.
- ↑ ராமானுஜன், டாக்டர் ஆர். (7 September 2018). "ராகயாத்திரை 21: ஆனந்த ராகம் கேட்கும் காலம்". Hindu Tamil Thisai. Archived from the original on 5 September 2020. Retrieved 11 July 2020.
- ↑ "Why I like... Guna". தி இந்து. 13 March 2009 இம் மூலத்தில் இருந்து 11 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200711142703/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/why-i-like-guna/article3021236.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ் காதல் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- 1991 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்