வி. டி. விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. டி. விஜயன்
பிறப்புதமிழ்
பணிதிரைப்பட தொகுப்பாளர்

வி. டி. விஜயன் இந்திய திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் பி. லெனின் உடன் இணைந்து பணியாற்றினார். தற்போது 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். வரலாறு திரைப்படத்திற்காக, சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான விஜய் விருதினை பி. லெனின் உடன் இணைந்து பெற்றுள்ளார். இவர், மணிரத்னம், சங்கர், தரணி, ஹரி, பிரபுதேவா, சிவா உள்ளிட்ட பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._டி._விஜயன்&oldid=3228403" இலிருந்து மீள்விக்கப்பட்டது