வரலாறு (திரைப்படம்)
வரலாறு | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிகுமார் |
தயாரிப்பு | எஸ்.எஸ் சக்கரவர்த்தி |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | அஜித் குமார், அசின், கனிகா சுப்ரமணியம், ரமேஷ் கன்னா சுமன் ஷெட்டி |
ஒளிப்பதிவு | பி.சி. ஸ்ரீ ராம் , ப்ரியன் |
விநியோகம் | நிக் ஆர்டஸ் |
வெளியீடு | 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹12 கோடி |
மொத்த வருவாய் | ₹50 கோடி |
வரலாறு (Varalaru: History of Godfather) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில் காட்ஃபாதர் என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் வரலாறு என மாற்றம் கொண்டது. இப்படம் 2002-ல் வெளியான வில்லன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார் .
கதை
[தொகு]அப்பாவின் அறிவுரைப்படி, தங்கள் குடும்பம் தத்து எடுத்திருக்கும் கிராமத்திற்கு தன் நண்பர்களுடன் சேவை செய்யப்போகும் பிள்ளைக்கு, அங்கு காணும் கல்லூரி மாணவி அசின் மீது எதிர்பாராமல் காதல் வருகிறது. அசினும் காதல் கொள்ள இருவீட்டு சம்மதத்துடன் கல்யாண தேதி குறிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அசின் வீட்டிற்கு குடித்து விட்டு செல்லும் அஜீத், பயங்கர கலாட்டாவில் ஈடுபடுகிறார். அதைதட்டிக் கேட்கும் தன் அப்பா அஜீத்தையே கொல்லத் துணிகிறார். அசினின் உறவுக்காரத் தோழியை அசின் கண் எதிரிலேயே பலாத்காரம் செய்கிறார். இதை எல்லாம் செய்து விட்டு நான் எதையுமே செய்யவில்லை என்று சொல்கிறார். இதனால் அவரை பைத்தியம் என்று முடிவு செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கின்றனர்.
இதற்கிடையில் அஜீத்தைப் பெற்றத் தாய், உயிருடன் இருக்கும் உண்மை அஜீத்துக்குத் தெரிய வருகிறது. தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அப்பா அஜீத், தன் அம்மா இறந்துவிட்டதாக கூறி தன்னை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? எனும் குழப்பமும், தன் பெயரில் யாரோ குற்றங்கள்... அதுவும் தன் அப்பாவையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு குற்றங்கள் புரிவது ஏன்? எனும் கேள்விகள் அஜீத் மனதில் எழுகிறது.
அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? அஜீத்திற்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துள்ளதா? அப்பா அஜீத்தைக் கொன்றாரா? தன் அம்மாவை பார்த்தாரா? அசினை கரம் பிடித்தாரா..? இது மாதிரி பல நூறு கேள்விகளுக்கு சுவரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வரலாறு' படத்தின் மீதிக்கதை!
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - சிவ சங்கர் , விஷ்ணு , ஜீவா
- கனிகா -காயத்ரி
- அசின் - திவ்யா
- பொன்னம்பலம் - திவ்யாவின் மூத்த சகோதரர்
- மன்சூர் அலி கான்- திவ்யாவின் இளைய சகோதரர்
- பாண்டு - கோதண்டம்
- ராஜ்யலட்சுமி - சிவ சங்கரின் அம்மா
- ரமேஷ் கண்ணா - விஷ்ணுவின் நண்பன்
- கே. எஸ். ரவிக்குமார் - குடும்ப மருத்துவர்
- கே. சிவசங்கர் - மாஸ்டர்
- சுஜாதா - காயத்ரியின் தாய்
- சந்தான பாரதி - காயத்ரியின் வேலைக் காரர்
- ராஜேஷ் - காவல் உதவி ஆணையர் விஜயகுமார்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.
- கம்மா கரையிலே - நரேஷ் ஐயர், சௌம்யா
- காற்றில் ஓர் வார்த்தை - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்க்கம், ரீனா பரத்வாஜ்
- இளமை - அஸ்லாம், தம்பி, சாலினி
- இளமை (Remix) - சுரேஷ் பீட்டெர்ஸ், பிலேஸ்
- தொட்டப்புரம் - கல்பனா, சோனு ககர், லியோன் ஜேம்ஸ், பியர் முகம்மது, ரஞ்சித்
- இன்னிசை - நரேஷ் ஐயர், மகதி
- இன்னிசை (Remix) - மகதி, ஷைந்தவீ
- தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரஹ்மான்
துணுக்குகள்
[தொகு]- அப்பா, பிள்ளை உள்பட மூன்று கேரக்டர்களில் அஜீத் நடித்துள்ளார்.
- ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராம் , ப்ரியனின் ஒளிப்பதிவு மூன்றும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.