தற்கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.[1]
உலக சுகாதார நிறுவனம், உலகில் கிட்டத்தட்ட 800000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறப்பதாக குறிப்பிடுகின்றது. மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78% மான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடுகிறது.[2]

பண்பாட்டு பார்வை[தொகு]

தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. ஆபிரகாமிய மதங்கள் தற்கொலையை மரியாதையற்றதாகக் கருதுகின்றன. தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாகவும் கருதப்படுகிறது. யப்பானிய சாமுராய் மரபில் ஒருவர் தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது.

காரணங்கள்[தொகு]

மிகுந்த உடல்வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக உடலைப் பயன்படுத்த முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கமும் உள்ளது. மருத்துவ உதவியுடனான தற்கொலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்தியாவில் தற்கொலை[தொகு]

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதை குற்றமாகக் கருதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 309வது பிரிவை நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.[3]உலகளவில் பதின்ம பருவத் தற்கொலைகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தற்கொலைகளைப் புரிந்துகொள்வது எப்படி?
  2. Fact Sheet (March 2017). "Suicide". World Health Organization. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2017.
  3. தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் அல்ல: சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு
  4. அதிகரிக்கும் பதின்பருவத் தற்கொலைகள் - இந்தியாவுக்கு முதலிடம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கொலை&oldid=2264136" இருந்து மீள்விக்கப்பட்டது