எஸ். வரலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். வரலட்சுமி
S. Varalakshmi.jpg
சௌதாமினி (1951) திரைப்படத்தில் எஸ். வரலட்சுமி
பிறப்பு ஆகத்து 13, 1927(1927-08-13)
இறப்பு செப்டம்பர் 22, 2009(2009-09-22) (அகவை 82)
சென்னை,இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் சத்தியபாமா

எஸ். வரலட்சுமி, (ஆகத்து 13, 1927 - செப்டம்பர் 22, 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வரலாறு[தொகு]

வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.

தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்[தொகு]

  1. கலைமாமணி விருது
  2. கலைவித்தகர்
  3. கவிஞர் கண்ணதாசன் விருது (2004)
  4. சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007

திரைப்படத் துறை பங்களிப்புகள்[தொகு]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

  1. சுவப்னசுந்தரி (1950)
  2. எதிர்பாராதது (1954)
  3. சதி சக்குபாய் (1954)
  4. சக்கரவர்த்தி திருமகள் (1957)
  5. சதி சாவித்திரி (1957)
  6. மாங்கல்ய பலம் (1958)
  7. லவ குச (1963)
  8. சத்ய அரிச்சந்திரா (1965)
  9. பாமா விஜயம் (1967)
  10. ஆபூர்வ பிறவிகள் (1967)
  11. நத்தையில் முத்து (1973)
  12. குணா (1992)
  13. வீரபாண்டிய கட்டபொம்மன்
  14. கந்தன் கருணை
  15. ராஜராஜ சோழன்
  16. பூவா தலையா
  17. சவாலே சமாளி
  18. நினைத்ததை முடிப்பவன்
  19. நீதிக்குத் தலைவணங்கு
  20. மாட்டுக்கார வேலன்
  21. பணமா? பாசமா?
  22. அடுத்த வாரிசு
  23. மோஹன சுந்தரம்

குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடினார்.

நடித்த தெலுங்குத் திரைப்படங்கள்[தொகு]

  1. கனகதாரா
  2. கோடாரிகம்
  3. லாயர் சுகாசினி
  4. மாமாகாரம்
  5. சதி துளசி
  6. டிங்கு ரங்கு
  7. வய்யாரி பாமா
  8. பவ்ரு வாகனா
  9. பால பாரதம் (1972)
  10. பொம்ம பொருசா (1971)
  11. பிரேம் நகர் (1971)
  12. ஆதர்ச குடும்பம் (1969)
  13. ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963)
  14. மகாமந்திரி திம்மரசு (1962)
  15. ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம் (1960)
  16. வாலி சுக்ரீவா (1950)
  17. ஜீவிதம் (1949)
  18. பாலராஜூ (1948)
  19. சேவா சதன் (1938)
  20. பாலயோகினி (1936)

மறைவு[தொகு]

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்[1]. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தினமணி செய்தி|பார்க்கப்பட்ட நாள் 23 செப் 2009". 2009-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வரலட்சுமி&oldid=3365073" இருந்து மீள்விக்கப்பட்டது