என். டி. ராமராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். டி. ராமராவ்
నందమూరి తారక రామా రావు
Ntr.jpg
Viswa Vikhyata Nata Sarwabhouma
பிறப்பு மே 28, 1923(1923-05-28)
நிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு சனவரி 18, 1996(1996-01-18) (அகவை 72)
ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
மற்ற பெயர்கள் என்டிஆர், நன்டமுரி தாரக ராமா ராவ்
அறியப்படுவது திரைப்படம், அரசியல்
பின் வந்தவர் சந்திரபாபு நாயுடு
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி
வாழ்க்கைத்
துணை
பசாவராமா, லக்ஷ்மி பார்வதி
பிள்ளைகள் ஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி

என். டி. ராமராவ் அல்ல‌து என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923ஜனவரி 18,1996) ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரது இயற் பெயர் நன்டமுரி தாரக ராமா ராவ்.

திரை வாழ்வு[தொகு]

என்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.

'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]

அரசியல் வாழ்வு[தொகு]

1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[3]

தமிழ்[தொகு]

 1. மாயா பஜார் (1957)
 2. லவகுசா (1963)
 3. கர்ணன் - கண்ணன் வேடம்
 4. கண்ணன் கருணை
 5. சண்டிராணி
 6. திருடாத திருடன்
 7. பணம் படுத்தும் பாடு
 8. பாதாளபைரவி

மேற்கோள்கள்[தொகு]

 1. http://ipr.ap.nic.in/release/ap_cms.asp
 2. http://www.maalaimalar.com/2012/03/31174855/nd-ramarao-charge-andhra-chief.html ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னன்
 3. http://cinema.maalaimalar.com/2009/12/09104812/mtr.html 70 வயதில் என்.டி.ராமராவ் மறுமணம்.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._டி._ராமராவ்&oldid=2538381" இருந்து மீள்விக்கப்பட்டது