ரேகா (தென்னிந்திய நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா
பிறப்புஜோஸ்பின்
ஆகத்து 28, 1970 (1970-08-28) (அகவை 53)
ஆலப்புழா, கேரளா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986–1996
2002-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஹாரிஸ் (1996 - தற்போது வரை)

ரேகா என்று அழைக்கப்படும் ஜோஸ்பின் 28 ஆகத்து 1970 என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்.

இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.[2] இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.[3] இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[4]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் அலைவரிசை
2006-2007 கனா காணும் காலங்கள் லட்சுமி விஜய் தொலைக்காட்சி
2019-2020 குக்கு வித் கோமாளி போட்டியாளர்
2020 பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1986 கடலோரக் கவிதைகள் ஜெனீபர்
1986 புன்னகை மன்னன் ரஞ்சனி
1987 செண்பகமே செண்பகமே
1987 உள்ளம் கவர்ந்த கள்வன்
1987 கதாநாயகன்
1988 என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மெர்சி
1988 மேகம் கறுத்திருக்கு
1988 காவலன் அவன் கோவலன்
1988 எங்க ஊரு பாட்டுக்காரன் காவேரி
1988 ராசாவே உன்னெ நம்பி
1988 காலையும் நீயே மாலையும் நீயே
1989 பாட்டுக்கு நான் அடிமை
1989 வரவு நல்ல உறவு
1989 நினைவே ஒரு சங்கீதம்
1989 தம்பி தங்கக் கம்பி
1989 பிள்ளைக்காக
1987 வேடிக்கை என் வாடிக்கை
1990 மூடு மந்திரம்
1990 புரியாத புதிர்
1991 குணா ரோசி
1991 இரும்பு பூக்கள் சிறப்புத் தோற்றம்
1991 வைதேகி கல்யாணம் வசந்தி
1992 இதுதாண்டா சட்டம் லட்சுமி
1992 அண்ணாமலை கீதா
1992 டேவிட் அங்கிள் மாலதி
1992 திருமதி பழனிச்சாமி சிறப்புத் தோற்றம்
1996 காலம் மாறிப்போச்சு லட்சுமி
2002 ரோஜாக்கூட்டம் பூமிகாவின் தாயார் (காவல் ஆய்வாளர்)
2003 கோவில் ஏஞ்சலின் தாயார்
2003 வில்லன் சிவாவின் தாயார்
2008 தசாவதாரம் மீனாட்சி
2010 உத்தம புத்திரன் மீனாட்சி
2013 யா யா வசந்தி
2013 தலைவா கங்கா ராமதுரை

தெலுங்குத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2012 மணி மணி மோர் மணி கீதா மாதுரி

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]