கயை வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயை வானூர்தி நிலையம்
புத்தகயை வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகயை
அமைவிடம்கயை
உயரம் AMSL116 m / 380 ft
ஆள்கூறுகள்24°44′40″N 084°57′04″E / 24.74444°N 84.95111°E / 24.74444; 84.95111ஆள்கூறுகள்: 24°44′40″N 084°57′04″E / 24.74444°N 84.95111°E / 24.74444; 84.95111
இணையத்தளம்கயை வானூர்தி நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
10/28 2,286 7,500 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணிகள்127,366(Green Arrow Up Darker.svg24.6%)
வானூர்தி இயக்கங்கள்1,635(Green Arrow Up Darker.svg13.8%)
மூலம்: ஏஏஐ,[1]

கயை வானூர்தி நிலையம் (Gaya Airport) அல்லது புத்தகயை வானூர்தி நிலையம், (Bodhgaya Airport, (ஐஏடிஏ: GAYஐசிஏஓ: VEGY) இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கயை நகரில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது கயை நகரிலிருந்து தென்மேற்கே 12 கிமீ தொலைவிலும் கோவில் நகரான புத்தகயாவிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. புத்தகயாவில் தான் புத்தருக்கு ஞானோதயம் உண்டானது. இந்த வானூர்தி நிலையம் பீகாரில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்; முதலாவது மாநிலத் தலைநகர் பட்னாவிலுள்ள செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். தாய்லாந்து, மியான்மர், பூட்டான், இலங்கை போன்ற பௌத்தர்கள் மிகுந்துள்ள நாடுகளுக்கு இந்த வானூர்தி நிலையத்திலிருந்து நிரந்தரமாக சமயச் சுற்றுலாப் பறப்புகள் இயக்கப்படுகின்றன. பௌத்தர்களுக்கு இதுவே உலகின் மிகவும் புனிதமானத் தலமாகும். ஏர் இந்தியா மட்டுமே இந்த வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகின்றது.

மேற்சுருக்கம்[தொகு]

கயை வானூர்தி நிலையத்தின் பரப்பளவு 954 ஏக்கர்களாகும். கூடுதலாக 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; தவிரவும் ஓடுபாதையை விரிவுபடுத்த மேலும் 100 ஏக்கர்கள் அண்மையிலுள்ள நான்கு சிற்றூர்களிலிருந்து நில கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7,500 சது மீட்டர்களில் கட்டப்பட்டுள்ள வானூர்திநிலையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 250 பயணிகளை வரவேற்கவும் 250 பயணிகளுக்கு விடை தரவும் திறனுள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த வானூர்தி நிலையத்தை கொல்கத்தா வானூர்தி நிலையத்திற்கு நெருக்கடிக் கால மாற்றாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.[2]

ஆகத்து 28, 2013இல் மாநிலங்களையில் குடிசார் வான்பயண அமைச்சகத்தின் துணை அமைச்சர் வேணுகோபால் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் வானூர்திநிலைய விரிவாக்கத்திற்காக பீகார் மாநில அரசிடம் மேலும் 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த வானூர்தி நிலையம் பெரும்பாலும் சுற்றுலாப் பருவம் சார்ந்தது. முதன்மையாக பௌத்த சமய சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை மற்றும் தென் கிழக்கு நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், கம்போடியாவிற்கு வானூர்தி சேவை வழங்குகின்றது.[3]

வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா தில்லி, கொல்கத்தா, வாரணாசி, யங்கோன்
பூட்டான் ஏர்லைன்சு பருவம்சார்ந்து: பாங்காக்–சுவர்ணபூமி, பாரோ
துருக்ஏர் பருவம்சார்ந்து: பாங்காக்–சுவர்ணபூமி, பாரோ
மியான்மர் ஏர்வேசு இன்டர்னேசனல் மேண்டலே, யங்கோன்
மியான்மர் தேசிய ஏர்லைன்சு பருவம்சார்ந்து: யங்கோன்
சிறீலங்கன் விமானச் சேவை பருவம்சார்ந்து: கொழும்பு
தாய் ஏர்ஏசியா ஒப்பந்தப் பயணம்: பாங்காக் டோன் மியூயங்
தாய் இசுமைல் பருவம்சார்ந்து: பாங்காக்–சுவர்ணபூமி
தாய் வியட்செட் ஏர் பருவம்சார்ந்து: பாங்காக்–சுவர்ணபூமி
வியத்நாம் ஏர்லைன்சு பருவம்சார்ந்து: பாங்காக்–சுவர்ணபூமி, ஹோ சி மின் நகரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. 12 March 2015 அன்று மூலம் (jsp) பரணிடப்பட்டது. 31 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Airport land issue: Patna's loss, Gaya's gain". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 August 2010. Archived from the original on 3 ஜனவரி 2013. https://archive.today/20130103180215/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-13/patna/28315369_1_patna-airport-runway-expansion-gaya-airport. பார்த்த நாள்: 6 May 2013. 
  3. "Buddhist Tourists". 2016-11-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-05-02 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கயை_வானூர்தி_நிலையம்&oldid=3586493" இருந்து மீள்விக்கப்பட்டது