பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்
Bandaranaike International Airport බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන්තොටුපළ பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவ | ||||||||||||||
உரிமையாளர் | இலங்கை அரசாங்கம் | ||||||||||||||
இயக்குனர் | விமானநிலையம் மற்றும் வான்போக்குவரத்து சேவை [இலங்கை] நிறுவனம் | ||||||||||||||
சேவை புரிவது | கொழும்பு | ||||||||||||||
அமைவிடம் | கட்டுநாயக்கா, இலங்கை | ||||||||||||||
மையம் | |||||||||||||||
உயரம் AMSL | 26 ft / 8 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 07°10′52″N 79°53′01″E / 7.18111°N 79.88361°E | ||||||||||||||
இணையத்தளம் | www | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
Statistics from Airport & Aviation Services Sri Lanka[1] |
பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bandaranaike International Airport) இலங்கையில் இருக்கும் பிரதான முக்கிய பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்.இரண்டாம் உலகப்போரில் இது ராயல் வானூர்திப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது.இன்றளவும் இதில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான வானூர்திப் படைத் தளமும் அமைந்துள்ளது. இது 1970இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப்பட்டது.இலங்கையில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் தெற்கு நகரான அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது.
ஜூன் 24, 2001]] அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுகாப்புக்களை மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் வானூர்திகளைச் சேதப்படுத்தினர்.
[[மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டார்.[2]
வசதிகள்
[தொகு]நிறுத்தும் தளங்கள்
[தொகு]- நிறுத்தும் தளம் அல்பா : ஒன்பது நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது ஐந்து வெளியக மற்றும் நான்கு பாலவழி தளங்களைக் கொண்டது. இது ஒரே தடவையில் நான்கு போயிங் 747 மற்றும் ஐந்து ஏர்பஸ் ஏ 330-200 கையாளும் வகையில் அமைக்கப்பட்டதுடன் இதுவே முதன்முதலாக கட்டப்பட்ட நிறுத்தும் தளமாகும்.
- நிறுத்தும் தளம் பிராவோ : எட்டு நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது நான்கு பாலவழி மற்றும் நான்கு வெளியக தளங்களைக் கொண்டது. இது போயிங் 747 வரையான விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏர்பஸ் ஏ380 விமானங்களை விமானங்களை கையாளுவதற்கு புனரமைக்கப்பட உள்ளது .
- நிறுத்தும் தளம் சார்லி : எட்டு நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது அணைத்து நிறுத்தும் தளங்களும் வெளியகதளங்களாகும். இதுவும் இது போயிங் 747 வரையான விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏர்பஸ் ஏ380 விமானங்களை விமானங்களை கையாளுவதற்கு புனரமைக்கப்பட உள்ளது .
- நிறுத்தும் தளம் டெல்டா :நான்கு வெளியக நிறுத்தும் தளங்களைக் கொண்ட இது சிறியரக விமானங்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டது.
முனையங்கள்
[தொகு]- முனையம் 1: 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது பழமையான மற்றும் மிக பெரிய முனையமாகவும் உள்ளது. 12 வாசல்கள்கொண்ட இது வருகை மற்றும் புறப்படுதல் என பிரிக்கப்பட்டு. அனைத்து சர்வதேச விமானங்களையும் கையாளும் இம் முனையமானது பிரதான கட்டடத்துடன் இணைக்கப்படுள்ளது.
- முனையம் 2 : 2020 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- முனையம் 3 : நவம்பர் 2012 ல் திறக்கப்பட்டது இது அனைத்து உள்நாட்டு விமானங்களையும் கையாளுகிறது.
- சரக்கு முனையம் : அக்டோபர் 2009 இல் திறக்கப்பட்ட இது அனைத்து சரக்கு விமானங்களையும் கையாளுகிறது.
ஓடுபாதை
[தொகு]பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய ஒரேயொரு ஓடுபாதை (04/22) ஆனது 3,350 மீ நீளமானது . மேல்எழுதல் மற்றும் இறங்கும் தூரம் முறையே 3.441 மீ மற்றும் 3,350 மீ ஆகும். கூடுதலாக நவீனரக விமானமான ஏர்பஸ் ஏ 380 செயல்படுத்த விமான நிலையத்தில் 4000 மீ நீள இரண்டாவது ஓடுபாதை மீது முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏ 380 கையாள மற்றொரு நடையோடுபாதை[டாக்சி வே ] உருவாக்க ஒரு திட்டமும் உள்ளது. கூடுதலாக பி.ஐ.ஏ விரிவாக்கம் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது இது செயற்படுத்தப்படும் .
விரிவாக்கம்
[தொகு]புதிய முனையத்தின் கட்டுமானம் செப்டம்பர் / அக்டோபர் 2017 முதல் தொடங்கி 2020 இல் பூர்த்தி செய்யப்படும்.
விமானங்கள் மற்றும் முடிவிடங்கள்
[தொகு]விமானநிறுவனம் | முடிவிடங்கள் | முனையம் |
---|---|---|
ஏரோவுலோட் | மாஸ்கோ | |
ஏர் அரேபியா | ஷார்ஜா | சர்வதேச |
ஏர் சைனா | செங்டு | சர்வதேச |
ஏர் இந்தியா | சென்னை, தில்லி, பருவகால வரனாசி | சர்வதேச |
ஏர் ஏசியா | கோலாலம்பூர்-சர்வதேச | சர்வதேச |
அசூர் ஏர் | பருவகாலம் :மாஸ்கோ | சர்வதேச |
கத்தே பசுபிக் | ஹாங்காங் | சர்வதேச |
சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் | குன்மிங், மாலே, ஷாங்காய்-புடாங் | சர்வதேச |
சின்னமன் ஏர் | மட்டக்களப்பு, | உள்ளூர் |
எமிரேட்ஸ் | துபாய்-சர்வதேச, மாலே, சிங்கப்பூர் | சர்வதேச |
என்டர் ஏர் | பருவகாலம் :வார்சா-சொப்பின் | சர்வதேச |
எதிஹாட் ஏர்வேஸ் | அபுதாபி | சர்வதேச |
பிளை டுபாய் | துபாய்-சர்வதேச, மாலே | சர்வதேச |
ஜெட் ஏர்வேஸ் | மும்பை | சர்வதேச |
கே எல் எம் | பருவகால: ஆம்ஸ்டர்டாம் | சர்வதேச |
கொரியன் ஏர் | மாலே, சியோல் | சர்வதேச |
குவைத் ஏர்வேஸ் | குவைத் | சர்வதேச |
மஹான் ஏர் | பருவகால:தெஹ்ரான் இமாம் கொமெய்னி | சர்வதேச |
மலேசியா ஏர்லைன்ஸ் | கோலாலம்பூர்-சர்வதேச | சர்வதேச |
மலிண்டோ ஏர் | கோலாலம்பூர்-சர்வதேச | சர்வதேச |
மெகா மாலத்தீவு | மாலே | சர்வதேச |
மில்லனியம் எயர்லைன்ஸ் | உள்ளூர் | |
ஓமான் எயார் | மஸ்கட் | சர்வதேச |
கத்தார் ஏர்வேஸ் | தோகா | சர்வதேச |
ரோடான ஜெட் | அபுதாபி | சர்வதேச |
ராயல் பிளைட் | பருவகால:மாஸ்கோ | சர்வதேச |
சவூதிஅ | ஜெடாக் , ரியாத் | சர்வதேச |
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் | சிங்கப்பூர் | சர்வதேச |
இஸ்பைஸ் ஜெட் | சென்னை, மதுரை | சர்வதேச |
சிறீலங்கன் எயர்லைன்ஸ் | அபுதாபி, பஹ்ரைன், பெங்களூர், பேங்காக்-சுவர்ணபூமி, பெய்ஜிங்-தலைநகர் சென்னை, தம்மம், தில்லி, டாக்கா, தோகா, துபாய்-சர்வதேச, கான் (1 டிசம்பர் 2016 தொடங்குகிறது), ஹாங்காங், , கராச்சி, கொச்சி, கொல்கத்தா, கோலாலம்பூர்-சர்வதேச, குன்மிங், குவைத், லாகூர், லண்டன்-ஹீத்ரோ, மதுரை, மாஹே, மாலே, மும்பை, மஸ்கட், ரியாத், ஷாங்காய்-புடாங், சிங்கப்பூர், திருவனந்தபுரம், திருச்சி, டோக்கியோ நரிடா, வாரணாசி,ஜெடாக்
பருவகால: செங்டு, சோங்கிங். || சர்வதேச | |
தாய் ஏர்வேஸ் | பேங்காக்-சுவர்ணபூமி | சர்வதேச |
தொம்சன் ஏர்வேஸ் | பருவகால: ஹெல்சின்கி, லண்டன்-கேட்விக் | சர்வதேச |
தேர்கிஷ் ஏர்லைன்ஸ் | இஸ்தான்புல்-அட்டாதுருக்கி | சர்வதேச |
உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் | கீவ்-போர்வைஸபில் | சர்வதேச |
உசாத்துணை
[தொகு]- ↑ "Bandaranaike International Airport – Annual Report" (PDF). Airport.lk. Archived from the original (PDF) on 2013-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
- ↑ "பதிவு இணையத்தளம் வெளியிட்ட செய்தி". Archived from the original on 2011-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.