பேச்சு:பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்வதேச என்பதை பன்னாடு என்றும், விமானநிலையம் என்பதை வானூர்தி நிலையம் என்றும் எழுதுதல் நல்லது. ஆனால், அரசேற்புடன் சர்வதேச விமான நிலையம் என்று இருந்தால் மாற்ற இயலாது. உள்நாட்டு, பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் என்பது நல்ல சொல்லாட்சிகள்.--C.R.Selvakumar 12:50, 4 அக்டோபர் 2006 (UTC)செல்வா

செல்வா மன்னிக்கவும் 2002 ஆம் ஆண்டில் இலங்கைகு மீளத்திரும்பிய பின்னர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமூடாகப் பயணிக்கவில்லை. எவ்வாறு எழுதினார்கள் என்று ஞாபகம் இல்லை. இணையத் தேடல்களும் சரியான் முடிவைத் தரவில்லை. வேறு பயனர்கள் அறிந்தால் இதைப் பற்றி அறியத் தரவும். நீங்கள் கூறிய தமிழ் நன்றாக இருப்பதால் ஓர் மீள்வழிநடத்தற் பக்கம் பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு உருவாக்கியுள்ளேன். --Umapathy 16:50, 8 அக்டோபர் 2006 (UTC)

இலங்கை ஊடகங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் எனும் பதமே பாவிக்கப்படுகின்றது ஆகவே அதனை கைக்கொள்ள கேட்டுக்கொள்கின்றேன்,--கலாநிதி 17:11, 28 நவம்பர் 2006 (UTC)

நன்றி கலாநிதி, பக்கத்தை வழிமாற்றியுளேன் --Umapathy 18:19, 28 நவம்பர் 2006 (UTC)


அண்மைய மாற்றங்கள்[தொகு]

கட்டுரையின் உரையை முன்னும் பின்னுமாக மாற்றி எழுதி இருக்கிறேன். முன்னர் இருந்த உரையை படித்த போது எந்த விமான நிலையத்தில் பெயர் எது என்று புரிந்து கொள்ள குழப்பமாக இருந்தது. கட்டுரையில் தொடர்ந்து தகவல்களை சேர்க்கும் போது ஒரு கோர்வையாக சேர்த்தல் நலம். இல்லாவிட்டால், இலங்கைக்கு வெளியில் உள்ளோருக்கு இவ்விதயத்தை எளிதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் தவிர்த்து பிற இடங்களில் சர்வதேச->பன்னாட்டு என்று மாற்றி இருக்கிறேன். கட்டுநாயக்கா, கட்டுநாயக்க - எது சரி?--Ravidreams 19:07, 28 நவம்பர் 2006 (UTC)

ரவி கலாநிதி குறிப்பிட்டது போல் ஊடகங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் என்றே இலங்கைப் பத்திரிகைளில் அறியப்படுகின்றது அதையே நாமும் கையாளலாம். நான் தான் தவறுதலாக கட்டுநாயக்கா என்று எழுதுவிட்டேன். எதற்கும் வழிமாற்றுப்பக்கம் இருக்கட்டும்--Umapathy 09:08, 29 நவம்பர் 2006 (UTC)

சரி, உமாபதி. ஆனால், கட்டுநாயக்கா, கட்டுநாயக்க - இந்த இரண்டு எழுத்துக்கூட்டல்களில் எது சரி?--Ravidreams 09:28, 29 நவம்பர் 2006 (UTC)

ரவி பண்டாரநாயக்கா கூடுதல் பொருத்தம் போலத் தெரிகின்றது. எனது கருத்துகள் சரியோதெரியவில்லை. குறிப்பு: இது கொழும்பில் இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதைக் கட்டுரையில் இருந்து நீக்கியுளேன். இதற்கு இப்பிரதேசம் கொழும்பில் இருந்து தென்மேற்காக இருப்பதே காரணம்--Umapathy 18:16, 29 நவம்பர் 2006 (UTC)

உமாபதி, நான் விமான நிலையப் பெயரையோ கட்டுரைப் பெயரையோ மாற்றச் சொல்லவில்லை. எனக்கு கட்டுநாயக்கா, கட்டுநாயக் - இரண்டில் எது சரி என்று தெரியவேண்டும். அவ்வளவுதான். இது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத கேள்வியாகவும் கருதலாம்--Ravidreams 18:24, 29 நவம்பர் 2006 (UTC)

மன்னிக்கவும் ரவி ஏதோ யோசனையில் பண்டாரநாயக்கவைப்பற்றி எழுதிவிட்டேன். கட்டுநாயக்கா எனக்குப் பொருத்தாமத் தெரிகின்றது கட்டுநாயக்க ஊடகங்களில் அறியப்பட்டது. பார்க்க http://www.virakesari.lk/business/view.asp?key=656 --Umapathy 18:31, 29 நவம்பர் 2006 (UTC)