பிலாசுபூர் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலாசா தேவி கெவத் விமான நிலையம்
Bilasa Devi Kevat Airport, Bilaspur

बिलासा देवी केंवट हवाई अड्डा, बिलासपुर
ஐஏடிஏ: PABஐசிஏஓ: VEBU
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
இயக்குனர் இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
சேவை புரிவது பிலாசுபூர், கோர்பா, இராஜ்கார், ஜான்கிர்-சம்பா
அமைவிடம் சகார்பபாதா, பிலாசுப்பூர் (சத்தீசுகர்)
உயரம் AMSL 274 m / 899 ft
ஆள்கூறுகள் 21°59′18″N 82°06′40″E / 21.98833°N 82.11111°E / 21.98833; 82.11111ஆள்கூறுகள்: 21°59′18″N 82°06′40″E / 21.98833°N 82.11111°E / 21.98833; 82.11111
நிலப்படம்
PAB is located in Chhattisgarh
PAB
PAB
PAB is located in இந்தியா
PAB
PAB
இந்தியா, சத்தீசுகரில் வானூர்தி நிலையம் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
17/35 1,535 5,036 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (மார்ச் 2021 - ஏப்ரல் 2021)
பயணி போக்குவரத்து 3,170
விமானப் போக்குவரத்து 64

பிலாசுபூர் வானூர்தி நிலையம் (Bilaspur Airport)(ஐஏடிஏ: PABஐசிஏஓ: VEBU) பிலாசா தேவி கெவத் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பிலாசுப்பூருக்கு தெற்கே சாகர்பட்டாவில் 6.2 மி தொலைவில் அமைந்துள்ளது. இது இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திற்குச் சொந்தமானது. 1980களில், போபால் மற்றும் தில்லிக்கு விமான பயணங்களை மேற்கொள்ள இந்த விமான நிலையத்தை வாயுடூட் பயன்படுத்தியது. தற்போது விமான நிலையத்திலிருந்து வர்த்தக திட்டமிடப்பட்ட விமானம், தில்லி, ஜபல்பூர், பிரயாகராஜ் செல்லும் வழிகள் 2021 மார்ச் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 27, 2021 அன்று பிலாசுபூர் விமான நிலையம் (72 இருக்கைகள் கொண்ட விமானம் 3 சி விஎஃப்ஆர் வகை) வணிக விமானங்களை இயக்குவதற்கான பொது விமான போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (இந்தியா) வணிக உரிமத்தைப் பெற்றது. பிப்ரவரி 2, 2021 அன்று, மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிலாசுபூர் விமான நிலையத்திலிருந்து 2021 மார்ச் 1 முதல் பிரயாகராஜ், டெல்லி, போபால், ஜபல்பூர் வரை வணிக விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.[1]

வரலாறு[தொகு]

இந்த வானூர்தி நிலையம் 1942ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் RAF பிலாஸ்பூர் ராயல் விமானப்படை (RAF) நிலையம் எனத் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த விமானநிலையம் பயன்படுத்தப்பட்டது. இது படை எண் 267, படை எண் 96, படை எண் 10 மற்றும் பிற பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1945இல் மூடப்பட்டது. கிரேட் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர், விமானநிலையம் இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது. பொது விமான இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்நிலையம் உள்ளது.

1988இல் பிலாசுபூர் நாக்பூர், அவுரங்காபாத் மும்பை, ராய்ப்பூர், போபாலுடன் வாயுத்சேவை மூலம் விமானச் சேவையிலிருந்தது.

இந்திய ராணுவம் விமான நிலையத்தைக் கையகப்படுத்திச் சிறப்புப் படையினருக்கான பயிற்சி வசதியை நிறுவ விரும்பியது. இமாச்சலப் பிரதேசத்தின் நஹானில் தற்போதுள்ள பாரா மிலிட்டரி கமாண்டோ பயிற்சி வசதி சத்தீஸ்கரின் பிலாசுபூருக்கு மாற்றப்பட உள்ளது. இராணுவம் முழு விமான நிலையத்தையும் பயன்படுத்த விரும்புகிறது, அதே நேரத்தில் இந்திய வானூர்தி நிலைய ஆணையம் 377 ஏக்கர் பகுதியினைப் பிரித்து 56 ஏக்கர் பகுதியில் பொது போக்குவரத்திற்குத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 7 டிசம்பர் 2018 அன்று பிலாடுபூர் விமான நிலையம் (19 இருக்கைகள் கொண்ட விமானம் 2 சி விஎஃப்ஆர் வகை) வணிக விமானங்களுக்கான இயக்க உரிமத்தை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (இந்தியா) பெற்றது. ஜனவரி 27, 2021 அன்று பிலாசுபூர் விமான நிலையம் [[72 இருக்கை விமானம் 3 சி விஎஃப்ஆர் வகை) வணிக விமானங்களை இயக்குவதற்கான வணிக உரிமத்தை [[சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (இந்தியா)]] பெற்றது.

அமைப்பு[தொகு]

விமானநிலையத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 276 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பகல் நேரத்தில் முனைய பார்வை
பிலாஸ்பூர் விமான நிலையத்தின் தற்போதைய முனையம்

ஓடுபாதை 17/35 1,535 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் இரு முனைகளிலும் திரும்பக்கூடிய பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு 630 மீட்டர் நீளமுள்ள நடையோடு பாதை ஒரு சிறிய ஓடுபாதை இணைக்கும் உலங்கு வானூர்தி இறங்குமிடம் கவச பகுதியும் உள்ளது.

போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ 320 போன்ற வணிக விமானங்களுக்கு ஓடுபாதை மிகவும் சிறியது. இதற்கு 2,190 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் (6,860 அடி.) புறப்படும் தூரம் தேவை. இதனால் ஏர் ஏசியா இந்தியா மற்றும் கோஏர் போன்ற பல குறைந்த கட்டண சிறிய வகை விமானச் சேவை தற்பொழுது நடைபெறுகிறது. ஓடுபாதை மேம்படுத்தப்படாவிட்டால் விமான நிலையத்திற்குச் சேவை செய்ய முடியாது.

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
அலையன்ஸ் ஏர் அகமதாபாத், போபால், தில்லி, ஜபல்பூர்[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bilaspur-Delhi air service will start from March 1, Union Civil Aviation Minister announced". Rajasthan Patrika.
  2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".

 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Airport information for VABI at World Aero Data. Data current as of October 2006.