கயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கயை
Metropolitan City
Mahabodhitemple
Country  இந்தியா
State பீகார்
Region மகத நாடு
Division Magadh Division
மாவட்டம் கயா
அரசு
 • வகை மாநகராட்சி
 • Body Gaya Nagar Nigam
 • District magistrate Kumar Ravi
பரப்பளவு[1]
 • மொத்தம் 90.17
ஏற்றம் 111
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 470[2]
 • தரவரிசை

98th (India)

2nd (Bihar)
 • அடர்த்தி 9,482
இனங்கள் Gayaite, Gayavi [3]
Languages
 • Official இந்தி, English, உருது
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 823001 – 13
Telephone code 91-631
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு IN-BR
வாகனப் பதிவு BR 02
Railway Station கயா சந்திப்பு தொடருந்து நிலையம்
Airport Gaya International Airport
இணையதளம் www.gaya.bih.nic.in , Apna Gaya Official

கயை அல்லது கயா (Gaya, இந்தி: गया) இந்திய மாநிலம் பீகாரில் உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது கயை மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடமாகும். முக்தி தரும் ஏழு நகரங்களில் கயையும் ஒன்றாகும். சப்த மோட்சபுரிகளில் மற்ற ஆறு நகரங்கள் அயோத்தி, துவாரகை, காஞ்சி,உஜ்ஜையினி, மதுரா மற்றும் வாரணாசி ஆகும்.

கயை மாநிலத்தலைநகர் பட்னாவிலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. இராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.

வரலாறு[தொகு]

தொன்மை வரலாறு[தொகு]

கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு கௌதம புத்தரின் பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 11 கிமீ தொலைவில் புத்தகயா உள்ளது. ராஜகிரகம், நாளந்தா, நாலந்தா பல்கலைக்கழகம், வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் மௌரியப் பேரரசு காலத்தில் மேலும் வலுப்பெற்றன.

அண்மைக்கால வரலாறு[தொகு]

நகரத்தில் Gaya, in about 1810 AD, பூசாரிகள் வசித்த பகுதி கயை என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி இலாகாபாத் என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக சாகேப்கஞ்ச் என அழைக்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்திலும் கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922 ஆம் ஆண்டு காங்கிரசின் அனைத்திந்திய மாநாடு தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் இங்குதான் கூடியது.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், Gaya, India
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.9
(75)
26.7
(80)
33.3
(92)
38.9
(102)
40.6
(105)
38.3
(101)
33.3
(92)
32.2
(90)
32.8
(91)
31.7
(89)
28.9
(84)
25
(77)
32.13
(89.8)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12.8
(55)
17.8
(64)
23.3
(74)
26.7
(80)
27.8
(82)
26.1
(79)
25.6
(78)
25
(77)
21.7
(71)
14.4
(58)
10
(50)
20.09
(68.2)
பொழிவு mm (inches) 20
(0.8)
20
(0.8)
13
(0.5)
8
(0.3)
20
(0.8)
137
(5.4)
315
(12.4)
328
(12.9)
206
(8.1)
53
(2.1)
10
(0.4)
3
(0.1)
1,133
(44.6)
ஆதாரம்: Weatherbase[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "City Development Plan for Gaya: EXECUTIVE SUMMARY" (PDF). Urban Development and Housing Department, Government of Bihar. பார்த்த நாள் 8 October 2012.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; census2011 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. [1]
  4. "Weatherbase.com". Weatherbase (2013). Retrieved on July 31, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிப்பயணத்தில் Gaya என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயை&oldid=2202128" இருந்து மீள்விக்கப்பட்டது