பால்கு ஆறு
Appearance
பல்கு ஆறு | |
River | |
கயையில் பாயும் பால்கு ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | பிகார் |
நகரம் | கயை |
உற்பத்தியாகும் இடம் | லீலாஜன் ஆறும், மோகனா ஆறும் கலந்து பால்கு ஆறாக பாய்கிறது. |
- அமைவிடம் | கயை அருகில் |
கழிமுகம் | புன்புன் ஆறு |
பால்கு ஆறு அல்லது பல்கு ஆறு அல்லது பல்குனி ஆறு, இந்தியாவின் பிகார் மாநில நகரமான கயையில் பாயும் புனித ஆறு ஆகும். [1]இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் பால்கு ஆற்றை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய காலத்தில் பால்கு ஆற்றை, சமசுகிருத மொழியில் நிரஞ்சனா ஆறு என அழைக்கப்பட்டது. பால்கு ஆற்றின் கரையில் கயை நகரம் மற்றும் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது.
லீலாஜன் ஆறும், மோகனா ஆறும் புத்தகயாவில் ஒன்று கூடி பால்கு ஆறாக கயையில் பாய்கிறது. [2]பால்கு ஆற்றை நிரஞ்சனா ஆறு என்றும் அழைப்பர்.[3]
மழைக் காலங்களில் மட்டும் பால்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பிற பருவ காலங்களில் பால்கு ஆறு நீரின்றி வற்றி இருக்கும்.[2]
சமயச் சிறப்பு
[தொகு]இந்து சமயத்தினர், பால்கு ஆற்றாங்கரையில் பிண்ட தானம், தர்ப்பணம் போன்ற நீத்தார் வழிபாடு செய்வது சிறப்பாக கருதுகின்றனர். [2][4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Falgu river
- ↑ 2.0 2.1 2.2 "Bengal District Gazaetter - Gaya By L.S.S. O'malley". pp. 8-9. Google books. Retrieved 2010-05-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gaya, India". Archived from the original on 2010-12-23. Retrieved 2010-05-05.
- ↑ "In Bihar, Hindu period to pray for dead begins". Thaindian News. Archived from the original on 2012-10-08. Retrieved 2010-05-05.