உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தி கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் தனதேவனின் அயோத்தி கல்வெட்டு
பண்டைய சமசுகிருத
செய்பொருள்கருங்கல்
எழுத்துபண்டைய சமசுகிருதம்
உருவாக்கம்கிமு 1ஆம் நூற்றாண்டு
கிபி முதல் நூற்றாண்டு
இடம்அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம்ரானோபலி மடம், சிறி உதய்சின் சங்கத் ரிஷி ஆஸ்ரமம்

மன்னர் தனதேவனின் அயோத்திக் கல்வெட்டு (Ayodhya Inscription of Dhana) கிமு முதல் நூற்றாண்டு அல்லது கிபி முதல் நூற்றாண்டில், சகேதம் என்று அழைக்கப்படும் அயோத்தி நாட்டை ஆண்ட தேவ அரச மரபைச் சேர்ந்த மன்னர் தனதேவன் பண்டைய சமஸ்கிருத மொழியில் நிறுவிய கருங்கல் கல்வெட்டாகும்.[1][2][3] மன்னர் தன தேவன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு, கோசல நாட்டை ஆண்டார். கிபி 130 முதல் 150 முடிய அயோத்தியை ஆண்ட மூலதேவன், வாயுதேவன், விசாகதேவன், தனதேவன், அஜவர்மன், சங்கமித்திரன், விஜயமித்திரன், தேவமித்திரன் போன்ற 15 மன்னர்களில் தனதேவனும் ஒருவர் என வரலாற்று ஆய்வாளர் பி. எல். குப்தா கூறுகிறார். [4] இக்கல்வெட்டு கிபி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என டி. சி. சர்க்கார் என நிறுவுகிறார்.[5]அயோத்தி கல்வெட்டு, தொல்லெழுத்துக் கலையின் படி, கிபி முதல் நூற்றாண்டில் மதுராவை ஆண்ட வடக்கு சத்திரபதிகளின் காலத்திய கல்வெட்டுகள் போன்று உள்ளது. [1]பழுதடைந்த இந்த அயோத்திக் கல்வெட்டில், படைத்தலவர் புஷ்யமித்திர சுங்கன் மற்றும் சுங்க அரச மரபின் வழித்தோன்றலான தனதேவனின் பெயர்களை குறித்துள்ளதுடன், புஷ்யமித்திர சுங்கன் செய்த அஸ்வமேத யாகம் குறித்தும், கோயிலைக் கட்டியதும் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ள நிலையில் உள்ளது.

அயோத்தி கல்வெட்டின் மொழிபெயர்ப்பு

[தொகு]

கோசல நாட்டின் மன்னரும், கௌசிக்கின் மகனும், இருமுறை அஸ்வமேத யாகம் செய்த படைத்தலைவர் புஷ்யமித்திர சுங்கன் வழி வந்த தன தேவன் எனும் தன பூதி தர்மராஜாவின் தந்தையான பால்குதேவன் நினைவாக கோயில் ஒன்றை எழுப்பினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Verma, Thakur Prasad (1971). The Palaeography Of Brahmi Script. p. 84.
  2. P. K. Bhattacharyya. Historical Geography of Madhyapradesh from Early Records. Motilal Banarsidass. pp. 9 footnote 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3394-4.
  3. Ashvini Agrawal (1989). Rise and Fall of the Imperial Guptas. Motilal Banarsidass. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0592-7.
  4. P.L. Gupta (1969), Conference Papers on the Date of Kaniṣka, Editor: Arthur Llewellyn Basham, Brill Archive, 1969, p.118
  5. D.C. Sircar (1965), Select Inscriptions, Volume 1, 2nd Edition, pages 94-95 and footnote 1 on page 95


"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_கல்வெட்டு&oldid=3452599" இலிருந்து மீள்விக்கப்பட்டது