பொம்பெயி இலக்குமி
கிபி முதல் நூற்றாண்டின் இலக்குமியின் நிர்வாண தந்தச் சிற்பம் (கிபி 79ல் வெசூவியஸ் எரிமலைச் சீற்றத்தால் சேதமடைந்தது.) | |
செய்பொருள் | தந்தம் |
---|---|
உயரம் | 24.5 செ மீ |
தற்போதைய இடம் | ரகசிய அருங்காட்சியகம், நேப்பிள்ஸ், இத்தாலி |
அடையாளம் | 149425 |
பொம்பெயி இலக்குமி சிற்பம் (Pompeii Lakshmi)இந்தியாவில் யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட 24.5 செண்டி மீட்டர் உயரம் கொண்ட இலக்குமியின் நிர்வாணச் சிற்பம் ஆகும். தற்போது இச்சிற்பம் இத்தாலி நாட்டின் பொம்பெயி நகரத்தின் இடிபாடுகளிலிருந்து 1930ல் கண்டெடுக்கப்பட்டது. [1][2] [3] யானையின் தந்தத்திலான இலக்குயின் சிற்பம் தற்போது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான இரகசிய அருங்காட்சியகத்தில் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [3]
சிலையின் அமைப்பு
[தொகு]யானையின் தந்தத்திலான இலக்குமி சிலையின் கழுத்து மற்றும் இடைகள் அழகிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் இருபுறத்திலும் இரண்டு யட்சினிகள் அழகு சாதனப் பொருட்களுடன் காட்சியளிக்கின்றனர். [1]
கிபி 79ல் வெசூவியஸ் எரிமலைச் சீற்றத்தால் பொம்பெயியில் இருந்த இலக்குமி சிற்பம் சேதமுற்றது.[1][2]இச்சிற்பம் கிபி 50-க்குள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நேப்பிள்ஸ் தொல்லியல் அருங்காட்சியக அறிஞர்கள் கருதுகின்றனர். [3]
தோற்றம்
[தொகு]இலக்குமியின் தந்தச் சிலை வட இந்தியாவின் மதுரா நகரத்தில் அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போகர்தன் எனுமிடத்தில் முதலில் செதுக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.[4] இச்சிலையின் தலை உச்சியில் வட்ட வடிவில் சும்மாடு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. [5]
மேற்கு சத்திரபதி நாட்டு மன்னர் நாகபானன் , சாதவாகன இராச்சியத்தை, கிமு 25-75 முடிய, ஏறத்தாழ 50 ஆண்டுகளாக போர் முற்றுகையிட்டான். [6]போர் முற்றுகையின் போது சாதவாகனர்களின் இராச்சியத்திலிருந்த இலக்குமி சிலையை, மேற்கு சத்திரபதிகளின் படைவீரர்கள் கடத்திச் சென்று, உரோமானியர்களுக்கு, கடல் வணிகம் மூலம் விற்பனை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Beard, Mary (2010). Pompeii: The Life of a Roman Town. Profile Books. p. 24.
- ↑ 2.0 2.1 De Albentiis, Emidio; Foglia, Alfredo (2009). Secrets of Pompeii: Everyday Life in Ancient Rome. Getty Publications. p. 43.
- ↑ 3.0 3.1 3.2 "Lakshmi". Museo Archeologico Napoli. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
- ↑ Dhavalikar, M. K. (1999). "Chapter 4: Maharashatra: Environmental and Historical Process". In Kulkarni, A. R.; Wagle, N. K. (eds.). Region, Nationality and Religion. Popular Prakashan. p. 46.
- ↑ Butterworth, Alex; Laurence, Ray (2011). Pompeii. Hachette UK. p. 36.
- ↑ Higham, Charles (2014). Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase Publishing. p. 299.
- ↑ The Voyage around the Erythraean Sea, translation with commentary, Chap 41, 48 and 49