உள்ளடக்கத்துக்குச் செல்

கஜூரஹோ சித்திரகுப்தர் கோயில்

ஆள்கூறுகள்: 24°51′16″N 79°55′12″E / 24.8544234°N 79.9200664°E / 24.8544234; 79.9200664
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரகுப்தர் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கஜுராஹோ
புவியியல் ஆள்கூறுகள்24°51′16″N 79°55′12″E / 24.8544234°N 79.9200664°E / 24.8544234; 79.9200664
சமயம்இந்து
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்தர்பூர்

சித்திரகுப்தர் கோயில் (Chitragupta temple) சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், கிபி 11ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கஜுராஹோவில் அமைந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இதனருகே அமைந்த தேவி ஜெகதாம்பிகை கோயில் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இங்கு கிடைத்த கல்வெட்டுக்கள் அடிப்படையில், இக்கோயில் கிபி 1020 - 1025 ஆண்டுகளில் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது.[1] இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக சித்திரகுப்தர் கோயிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிவித்துள்ளது. [2]

கட்டிடக் கலை

[தொகு]
சித்திரகுப்தர் கோயில்

மணற்கற்களால் கட்டப்பட்ட சித்திரகுப்தர் கோயிலின் கருவறையைச் சுற்றி வலம் வருவதற்கு பிரகாரமும், முன்கூடமும், சிலுவை வடிவ மகாமண்டபமும், நுழைவு வாயிலும் கட்டப்பட்டுள்ளது.

மகாமண்டபம், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட எண்கோண குவிமாடம் கொண்டுள்ளது. [3]. இக்கோயில் இரண்டு மேல்மாடங்கள் கொண்டது.[4]

சிற்பங்கள்

[தொகு]

2.1 மீட்டர் உயரம் கொண்ட சித்திரகுப்தர் கோயில் கருவறை பாதி சிதைந்த நிலையில் உள்ளது. கருவறையில் நின்ற நிலையில், ஆயுதங்கள் தரித்து, தாமரைப் பூக்கள் ஏந்திய நிலையில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியதேவனின் பெரிய சிலை உள்ளது. கருவறை கதவுகளின் உத்திரத்தில் சூரியன் சிறிய உருவச் சிலைகள் உள்ளது.[5][3]

கோயில் வெளிப்புற கோபுரங்களில் பலகோணங்களில் சிற்றின்பச் செயல்களில் ஈடுபடும் அழகிய இளங்காதலர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. [3] விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரம்பையர்கள் தங்கள் யோனியை வெளிப்படுத்திக் கொண்டு, கையில் தாமரைப் பூவை ஏந்தி நிற்கும் சிற்பங்கள் உள்ளது. மேலும் மனித உடலுடனும்; காளையின் தலையுடன் காட்சியளிக்கும் நந்தி தேவரின் சிற்பமும் உள்ளது[6]

கஜூரஹோ கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chitragupta Temple Khajuraho
என்பதில் ஊடகங்கள் உள்ளன.