உள்ளடக்கத்துக்குச் செல்

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
View of the Valley of Flowers
வகைNatural
ஒப்பளவுvii, x
உசாத்துணை335
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1988 (12ஆவது தொடர்)

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த மலர்களை கொண்டுள்ள இந்த தேசியப் பூங்கா மேற்கு இமயமலைப் பகுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் பல வகையான கருப்பு கரடிகள், பனி சிறுத்தைகள், பழுப்பு கரடிகள் மற்றும் நீல ஆடுகள் உட்பட பல அரிதான விலங்குகளை காணலாம்.

புகழ்பெற்ற நந்தா தேவி தேசிய பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

தொன்ம வரலாறு

[தொகு]

இராமாயணத்தில் இராவணன் மகன் இந்திரஜித்தினால் காயபடுத்தப்பட்ட இலட்சுமணனுக்கு இங்கிருந்து அனுமன் சஞ்சீவினி மலையைக் கொண்டு வந்ததால் அவர் குணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்

[தொகு]