தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகளின் செயலகக் கட்டிடம்


தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் (Chandigarh Capitol Complex), இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்த அரசுக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1] [2] என்பவரால் 1953ல் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிட வளாகம், 2016ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[3]

நூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசுக் கட்டிட வளாகம், சட்டமன்ற அரண்மனை, செயலகக் கட்டிடம் மற்றும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், திறந்த கை நினைவுச்சின்னம் மற்றும் ஒரு ஏரியும் கொண்டதாகும்.[4][5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]