திறந்த கை நினைவுச்சின்னம்
Open Hand Monument | |
![]() இந்தியாவின் சண்டிகரில் உள்ள திறந்த கை நினைவுச்சின்னம் | |
இடம் | சண்டிகர், இந்தியா |
---|---|
வடிவமைப்பாளர் | லெ கொபூசியே |
உயரம் | 26 மீ (85 அடி) |
துவங்கிய நாள் | 1964 |
முடிவுற்ற நாள் | 1985 |
திறந்த கை நினைவுச்சின்னம் (Open Hand Monument) என்பது இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகரில் அமைந்துள்ள ஒரு குறியீடு ஆகும். இதனை கட்டிடக் கலைஞர் லெ கொபூசியே வடிவமைத்தார். இச்சின்னம் சண்டிகர் நகரைச் சுட்டும் குறியீடாக அறியப்படுகிறது. இது "மாந்த இன ஒருமைப்பாட்டையும் அமைதியையும் செழிப்பையும் அளிக்கவும் பெறவுமான கை" என்பதனைச் சுட்டுகிறது.[1] 50 சிறிய டன் எடையும் 26 மீட்டர் உயரமும் கொண்ட இச்சின்னமே லெ கொபூசியே வடிவமைத்த பல திறந்த கை சிற்பங்களில் பெரியது.[2] இச்சின்னம் பறக்கும் பறவையைப் போல் தோன்றும். காற்றில் சுழலுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][3][4]
இருப்பிடம்
[தொகு]திறந்த கை சண்டீகரின் தலைநகர வளாகத்தின் பகுதி ஒன்றில், பின்னணியில் இமய மலைத் தொடரின் சிவாலிக் மலை தோன்ற அமைந்துள்ளது. திறந்த கை அமைந்துள்ள சண்டிகர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாலைகள், வான்வழி, இருப்புப் பாதை வழி நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 22 (அம்பாலா – கால்கா- சிம்லா – கின்னூர்) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 21 (சண்டிகர் – மணாலி) ஆகியன இந்நகர் ஊடாகச் செல்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Betts & McCulloch 2014, ப. 61-62.
- ↑ Shipman 2014, ப. 7.
- ↑ Jarzombek & Prakash 2011, ப. 1931.
- ↑ "Capitol Complex". Tourism Department Government of Chandigarh.
நூற்பட்டியல்
[தொகு]- Betts, Vanessa; McCulloch, Victoria (10 February 2014). Delhi & Northwest India Footprint Focus Guide: Includes Amritsar, Shimla, Leh, Srinagar, Kullu Valley, Dharamshala. Footprint Travel Guides. ISBN 978-1-909268-75-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Corbusier, Le; Žaknić, Ivan (1997). Mise Au Point. Yale University Press. ISBN 978-0-300-06353-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jarzombek, Mark M.; Prakash, Vikramaditya (4 October 2011). A Global History of Architecture. John Wiley & Sons. ISBN 978-0-470-90248-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, Sangeet (26 September 2010). Corb's Capitol: a journey through Chandigarh's architecture. A3 foundation. ISBN 978-81-8247-245-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - Shipman, Gertrude (5 October 2014). Ultimate Handbook Guide to Chandigarh : (India) Travel Guide. MicJames. pp. 7–. GGKEY:32JTRTZ290J.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)[தொடர்பிழந்த இணைப்பு]