காஞ்சிபுரம் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிந்துக்களுக்கு, வட நாட்டு புனிதத் தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனிதத் தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர், வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது, குறிப்பிடத்தக்கது. இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1] இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன.

காஞ்சிபுரம் நகரத்தின் அமைப்பினாலும், பண்டைய சமூக அமைப்பினாலும், பல சிறு கோயில்கள் தனியார் நிலங்களிலும், தொழில் மற்றும் கல்வி வளாகங்களிலும் அமைந்து உள்ளன. இதனால், அவற்றை கண்டறிவது சிரமமானதாக இருக்கும். சிவ ராத்திரி போன்ற சிறப்பு வழிபாட்டு நாட்களன்று, இவற்றிற்கு அலங்கார விளக்குகளும், விளம்பர பதாகைகளும் வைக்கப்படுகின்றன. அதானல், அந்த நாட்களில் மட்டும், அலைச்சல் இல்லாமல் சிறு கோயில்களில் வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பாரம்பரியக் களம்[தொகு]

யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது.[2] அதில் காஞ்சிபுரம் கோயில்களும் ஒன்றாகும்.

சிவாலயங்கள்[தொகு]

1008 சிவாலயங்கள் இருந்த காஞ்சியில், தற்போது, 108 சிவாலயங்கள் மட்டுமே உள்ளன.[3]

பாடல் பெற்ற தலங்கள்[தொகு]

எண் கோயில் இறைவன் இறைவி பாடல் இயற்றியவர் இடம்
1 கச்சி ஏகாம்பம் ஏகாம்பரேஸ்வரர் ஏலவார் குழலி திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ரயில் நிலையம் அருகில்
2 திருக்கச்சி மேற்றளி திருமேற்றளிநாதர், ஓத உருகீஸ்வரர் திருநாவுக்கரசர், சுந்தரர் பிள்ளையார் பாளையம்
3 கச்சி அனேகதங்காபாதம் அனேகதங்காபாதேஸ்வரர் சுந்தரர் பிள்ளையார் பாளையம்
4 திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் சுந்தரர் பஞ்சுப்பேட்டை
5 கச்சிநெறி காரைக்காடு காரை திருநாதேஸ்வரர் சம்பந்தர் திருக்காலிமேடு

வைணவத் திருக்கோயில்கள்[தொகு]

  1. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
  2. காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
  3. அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்
  4. காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில்
  5. திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

மற்ற தலங்கள்[தொகு]

எண் கோயில் சிறப்பு/நம்பிக்கை இடம்
1 பிரம்மபுரீஸ்வரர் பிரம்மன் வயிபட்ட தலம் தேனம்பாக்கம் சங்கர மடம்
2 வேதவனேஸ்வரர் சதாவனம்
3 புண்ணியகோட்டீஸ்வரர் மேக வடிவில் திருமால் இறைவனை வழிபட்ட தலம் புண்ணியகோட்டீஸ்வரர் தெரு, திருக்காலிமேடு
4 மணிகண்டீசுவரர் விஷம் உண்டதற்காக, ஈசனை, திருமால், பிரம்மன் மற்றும் தேவர்கள் வயிபட்ட தலம் டி.கே.நம்பி தெரு
5 விஷகண்டீஸ்வரர் தங்கள் குற்றங்களை எண்ணாமல், தங்களுக்கு அமிர்தம் அளித்தற்காக ஈசனை தேவர்கள் வழிபட்ட தலம் டி.கே.நம்பி தெரு பி்ன்புறம்
6 பணாமணீசுவரர் ஈசன் விஷம் உண்டதற்காக, வாசுகி எனும் பாம்பு ஈசனை மாணிக்க கற்களால் வழிபட்ட தலம் திருவள்ளுவர் தெரு
7 காசிபேஸ்வரர் காசிப முனிவர் வழிபட்ட தலம் பச்சையப்பன் மளிர் கல்லுாரி அருகில்
8 அத்திரீஸ்வரர் அத்திரி முனிவர் வழிபட்ட தலம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி வளாகம்
9 குச்சபேஸ்வரர் குச்ச முனிவர் வழிபட்ட தலம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி வளாகம்
10 அங்கீரசம் அங்கீரச முனிவர் வழிபட்ட தலம் சாந்தாலீஸ்வரர் கோயில் தெரு, டி.கே.நம்பி தெரு அருகே
11 வியாச சாந்தாலீஸ்வரர் காசியில் நந்தியிடம் பெற்ற சாபத்திற்கு, வியாச முனிவர் இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெற்றார் சாந்தாலீஸ்வரர் கோயில் தெரு, டி.கே.நம்பி தெரு அருகே
12 வசிஷ்டேஸ்வரர் வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலம் சாந்தாலீஸ்வரர் கோயில் தெரு, டி.கே.நம்பி தெரு அருகே
13 வன்னீஸ்வரர் தேரடி எதிரில்
14 முத்தீசுவரர் திருக்குறிப்பு தொண்ட நாயனார் வழிபட்ட தலம். கருடன் வழிபட்ட லிங்கமான கருடேஸ்வரரும் இங்கு உள்ளார். காந்தி ரோடு
15 வழக்கறுத்தீசுவரர் தேவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை இறைவன் இங்கு தீர்த்து வைத்தார். சட்ட ரூதியான வழக்குகளில் இருநு்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். பராசர முனிவர் வழிபட்ட பராசரேஸ்வரரும் இங்கு உள்ளார் காந்தி ரோடு
16 சித்தீஸ்வரர் / மஞ்சள் நீர் கூத்தர் பல முனிவர்கள் வழிபட்ட தலம். உமையம்மை மஞ்சள் ஆற்றில் நீராடி ஈசனை வழிபட்ட தலம். இங்கு உள்ள சித்த தீர்தத்தில் நீராடுவதால் உடல் மற்றும் மன பிணி நீங்கும் என, காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது காமராஜர் சாலை
17 நகரீஸ்வரர் மேட்டுத் தெரு, பேருந்து நிலையம் எதிரே
18 ஆதிபதீஸ்வரர் பெருமாள் விளக்கொளி வேண்டி வழிபட்ட தலம் விளக்கொளி பெருமாள் கோயில் எதிரே
19 விருபாக்ஷி ஈஸ்வரர் விரும்பி கேட்ட வரங்களை அளிப்பவர் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு
20 பணாமுடீஸ்வரர் தாங்கள் இறைவனுக்கு ஆபரணமாக இருக்க வேண்டும் என, பாம்புகள் விரும்பி கேட்டு வழிபட்ட தலம். இந்த கோயிலின் உள்ளே அருள்மிகு சித்தீசமும் உள்ளது. ஆலடி பிள்ளையார் கோயில் தெரு
21 கெளதமேஸ்வரர் கெளதம முனிவர் வழிபட்ட தலம் வேளிங்பட்டரை
22 அறம் வளத்தீஸ்வரர் பல முனிவர்கள் வழிபட்ட தலம் வளத்தீஸ்வரர் கோயில் தெரு
23 திருலோகநாதர் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் அருகில், ஓர் அரிசி ஆலையில் உள்ளது
24 கணிகண்டீஸ்வரர் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு
25 எமதருமேசம் எமன் வழிபட்ட தலம் தாயார் குளம் மேற்கு கரை மேல் உள்ளது
26 காயாரோகணேசுவரர் குரு பகவானும், லக்ஷ்மியும் வழிபட்ட தலம் தாயார் குளம் அருகில்
27 இலிங்கபேசம் கரு கோயில் அருகில் உள்ளது
28 ரூத்ரகோட்டீஸ்வரர் ரூத்ரர்கள் வழிபட்ட தலம் புதுப்பாளைய தெரு
29 சிதம்பரேஸ்வரர் புதுப்பாளைய தெரு
30 முத்தீசுவரர் சன்னதி தெரு, கிருஷ்ணன் தெரு அருகில்
31 வன்னீஸ்வரர் கிருஷ்ணன் தெரு
32 ஆனந்த ருத்ரேசர் சாமிநாதன் தெரு
33 மகா உருத்திரேஸ்வரர் மாதனம்பாளைய தெரு
34 அனாதிருத்திரேஸ்வரர் மாதனம்பாளைய தெரு
35 சோளீசுவரர் பிரம்மனின் கபாலம் ஏந்தி, திருமால் மற்றும் தேவர்களிடம் ரத்த பிச்சை பெற்ற பைரவர், இங்குள்ள லிங்கத்தை வழிபட்டார். அஷ்ட பைரவர்கள் வழிபட்ட லிங்கங்களும் இங்கு உள்ளன. மேலும், திருமாலின் சக்கரத்தை வினாயகரிடம் இருந்து, விஸ்வக்ஷேன விகடம் கூத்து ஆடி திரும்பப் பெற்ற இறைவன் விஸ்வக்ஷேனேஸ்வரரின் சன்னதியும் உள்ளது சோளீஸ்வரன் கோயில் தெரு
36 தக்கேசுவரர் சிவ அபராதம் நீங்க, தக்ஷன் ஆட்டு தலை பெற்று வழிபட்ட தலம் கச்சியப்பன் தெரு
37 பலபத்திராமேஸ்வரர் பலராமன் வழிபட்ட தலம் திருமேற்றளி தெரு
38 உற்றுக்கேட்ட முத்தீசர் திருலஞானசம்பந்தர் பாடிய பதிகங்களை உற்றுக்கேட்ட இறைவன் திருமேற்றளி தெரு
39 காளத்தீஸ்வரர் திருமேற்றளி தெரு
40 வில்வநாதேஸ்வரர் திருஞானசம்பந்தர் மடத்தின் பின்புறம்
41 இராமேசுவரர், இலட்சுமீசுவரர் பாரதி நகர், கிருஷ்ணன் தெரு அருகில்
42 கற்கீசுவரர் திருமால் வழிபட்ட தலம் பாரதி நகர், கிருஷ்ணன் தெரு அருகில்
43 அகத்தீசுவரர் அகத்தியர் வழிபட்ட தலம் உபனிஷத் மடத்தில் உள்ளது
44 கேசவேஸ்வரர் கைலாசநாதர் கோயில் மேட்டு தெருவை ஒட்டிய வயலில் உள்ளது
45 வன்மீகநாதர் திருமால், இந்திரன் மற்றும் பிற தேவர்கள் வழிபட்ட தலம் கைலாசநாதர் கோயில் மேட்டு தெருவை ஒட்டிய வயலில் உள்ளது
46 சந்திரேசுவரர் சந்திரன் வழிபட்ட தலம் சந்தவெளி அம்மன் கோயில் பி்ன்புறம், வெள்ளைக்குள தெரு
47 அனுமந்தேஸ்வரர் சர்வதீர்த்த குளம்
48 யோகலிங்கேஸ்வரர் பல முனிவர்கள் தவம் செய்த தலம் சர்வதீர்த்த குளம்
49 கங்காவரேசுவரர் கங்கையும், வருணனும் தாங்கள் செய்த பாவம் நீங்க வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
50 இராமநாதீசுவரர் ராமர் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
51 சீதேஸ்வரர் சீதை வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
52 லட்சுமனேஸ்வரர் லட்சுமணன் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
53 மல்லிகார்ஜுனேசுவரர் பல முனிவர்கள் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
54 தீர்த்தேசுவரர் சர்வதீர்த்த குளம்
55 இரண்யேஸ்வரர் இரணியன் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
56 விஸ்வநாதேஸ்வரர் இங்கு முக்தி மண்டபம் சிறப்பு சர்வதீர்த்த குளம்
57 காமேசுவரர் காமன் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
58 தவளேசுவரர் யோகாமாரிய பதவி மற்றும் முக்தி பெற பல யோகிகள் வழிபட்ட தலம் சர்வதீர்த்த குளம்
59 செவ்வந்தீசர் வாயுதேவன் செவ்வந்தி பூக்களால் வழிபட்ட தலம் விவசாய பண்ணை பக்கத்தில் உள்ளது
60 பரிதீசுவரர் சூரியன் வழிபட்ட தலம் பருத்தி குளம்
61 வீரட்டானேஸ்வரர் சாக்கிய நாயனார் கல் எறிந்து வழிபட்ட தலம் மாதா கோயில் எதிரே
62 அருணாச்சலேஸ்வரர் காமராஜர் பகுதி, தெரு 2ம் தெரு
63 மகாலிங்கேசுவரர் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஏற்பட்ட போட்டியின் முடிவில் இருவரும் ஈசனை வணங்கியதை குறிக்கும் தலம் அப்பாராவ் தெரு
64 சூரியேஸ்வரர் தாமல்வார் தெரு
65 பூதநாதேஸ்வரர் பூக்கடை சத்திரம்
66 முக்கால ஞானேசுவரர் முக்காலங்களை அறிய முனிவர்கள் வழிபட்ட தலம் பேருந்து நிலையம் உள்ளே
67 நகரீஸ்வரர் கீழண்டை ராஜ வீதி
68 மச்சேசுவரர் திருமால் மச்ச வடிவில் ஈசனை வழிபட்ட தலம் கீழண்டை ராஜ வீதி
69 முத்தீஸ்வரர் கீழண்டை ராஜ வீதி
70 அபிராமேசுவரர் திருமால் வாமன வடிவில் ஈசனை வழிபட்ட தலம் சங்குபாணி வினாயகர் கோயில் எதிரே
71 கண்ணேசர் தன் கரிய நிறம் மாற, திருமால் வழிபட்ட தலம் செங்கழுநீர் ஓடை வீதி
72 மாகாளேசுவரர் காளத்தி நாதனின் கட்டளைப்படி மஹாகாளன் எனும் பாம்பு, இங்கு வந்து பூஜித்த பிறகு காளத்தி சென்று முக்தி அடைந்தது காமாக்ஷி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் எதிரே உள்ளது
73 எதிர் வீரட்டானேஸ்வரர்/கிருஷ்ணவேஸ்வரர் கம்மாள தெரு
74 முத்தீஸ்வரர் வாமதேவ முனிவர் வழிபட்ட தலம் கம்மாள தெரு
75 கடகேசுவரர் உமை அம்மை கடகம் தரித்து ஈசனை வழிபட்ட தலம் கம்மாள தெரு
76 கங்கணேசுவரர் உமை அம்மை கங்கணம் தரித்து ஈசனை வழிபட்ட தலம் சின்ன கம்மாள தெரு
77 நல்லிணக்கீசுவரர் எழிச்சூர்

தகவல்கள்[தொகு]

  1. ஆ.பா.திருஞானசம்பந்தன்."காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு".தேன்மொழி பதிப்பகம்,2002, பக்கம்.189
  2. Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites
  3. தினமலர் நாளிதழ், சென்னை பதிப்பில் 9-3-2013ம் தேதி வெளியான காஞ்சி சிவாலயங்களின் பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிபுரம்_கோயில்கள்&oldid=3763184" இலிருந்து மீள்விக்கப்பட்டது