உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் பணாமணீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பணாமணீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பணாமணீசர்.
தீர்த்தம்:அனந்த தீர்த்தம்.

காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்) என அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், வாசுகி - வழிபடுவதுபோல சுவாமிக்கு அருகிலே உள்ள. இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

[தொகு]
  • இறைவர்: பணாமணீசர்.
  • தீர்த்தம்: அனந்த தீர்த்தம்.
  • வழிபட்டோர்: வாசுகி.

தல வரலாறு

[தொகு]

திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்கி உலகைத் துன்புறுத்திய தன் தோசத்தைப் போக்கிக் கொள்ள, அனந்த தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் சிவலிங்கத்தை நிறுவி, தன்னிடத்துள்ள மாணிக்கத்தைச் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு தன் தோசத்தைப் போக்கிப், பேறு பெற்றது. பாம்பின் மணியாகிய மாணிக்கத்தை கொண்டு வழிபட்டமையால், இவ்விறைவர் "பணாமணீசர்" என்று பெயர் பெற்றாரென்பது இத்தல வரலாறாக அறியப்பட்டது.[2]

தல பதிகம்

[தொகு]
  • பாடல்: (1) (பணாமணீச வரலாறு)
அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுகியும்
பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச்
சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு
நித்தம் அக்கரைக் கண்இருந் தருச்சனை நிரப்பி.
  • பொழிப்புரை: (1)
அத்தவத்தின்கண் தனது பிழைதீர வாசுகி என்னும் பெரும் பாம்பும்
பேரன்பிற் பணாமணீசனை விதிப்படி தாபித்துத் தூயநீர் நிறைந்த அனந்த
தீர்த்தத் தடம் வகுத்து நாடொறும் அக்கரையிலிருந்து அருச்சனை முற்றுறச் செய்து,
  • பாடல்: (2)
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி
நணாவ கத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை
உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள்
மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான்.
  • பொழிப்புரை: (2)
பணாமணீசப் பெருமானைத் தன்னுடைய படத்தின் இரத்தினங்களால்
பூசனை செய்து திருநணா என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்
கொண்டு பருகும் தலைவனே! எனத் துதி செய்து உமையம்மை மணவாளன்
திருமேனியில் அணிகலமாகத் தங்குகின்ற வரத்தினைப் பெற்றனன்.
வாசுகி பாலில் விடம் பெய்த பிழையுந் தவிர்ந்து அணிகலனாக
இறைவன் திருமேனியில் விளங்கவும் பேறு பெற்றனன்.[3]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தென்கிழக்கு பகுதியில் (சிறிய காஞ்சிபுரம் (விஷ்ணுகாஞ்சி) திருவள்ளுவர் தெருவருகே உள்ள ஐயங்கார்பாளையத் தெருவில் கிழக்கு பார்த்த சந்நிதியாக இச்சந்நிதி உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் பாகம் 1b | 11. மணிகண்டேசப் படலம் (632 - 698) | பணாமணீசர் வரலாறு - 695, 696
  2. "shaivam.org | (பணாமணீசம்) பணாமணீசர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | மணிகண்டேசப் படலம் | பாடல் 64-65| பக்கம்: 214
  4. "palsuvai.net | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 93. ஸ்ரீ பணாமணீஸ்வரர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.

புற இணைப்புகள்

[தொகு]