காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் வாலீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வாலீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாலீஸ்வரர்.

காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் (வாலீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் மூன்றாம் பிரகாரத்தில் கச்சிமயானத்திற்கு கீழ்பால் மேற்கு பார்த்த சன்னதியாக தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விறைவரை வாலி வழிபட்டமையால் வாலீசம் எனப்பட்ட இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல சிறப்பு[தொகு]

தேவேந்திரனின் மகனாகிய வாலி தன்னை யுத்தத்தில் யாவர் எதிர்ப்பினும் அவரது பலத்தில் தனக்கு பாதியும், தோல்வியில்லாத வெற்றியும் வரவேண்டும் என்று பூசித்தனன். அச்சுயம்புமூர்த்தி வாலியின் வால் தழும்பும் பெற்றுள்ளார்.[2]

தல வரலாறு[தொகு]

இச்சிவலிங்கத்தை சித்தர்கள் வழிபட, அதனின்றும் வாயு லிங்கம் தோன்றியது. இம்மூர்த்தத்தை வாலியும் வழிபட்டு, தான் வானரங்களுக்கு அரசனாகும் தன்மையையும், தன்னை எதிர்ப்போரின் பலத்தில், தனக்குப் பாதியைப் பெறும் வரத்தினையும் பெற்றுச் சிறப்புற்றான் என்பது தல வரலாறு.[3]

தல விளக்கம்[தொகு]

வாலீசம் வாலி பூசித்துப் போரில் எதிர்த்தவர் வலியில் செம்பாதி தன்னையடையப் பெற்றதலம். கச்சி மயானத்திற்குக் கிழக்கதாய் மேற்கு நோக்கியதாய்ச் சித்தர்கள் வழிபடத்தோன்றிய வாயுலிங்கமே அவ்வாலீசமாகும். வாலி இருக்கைக்குக் கொண்டு செல்லப் பெயராது வால் அற்று விழ அதன் வடுப்பெற்று இக்காஞ்சியை விட்டென்றும் நீங்கோரானப் பெருமான் அருளும் சிறப்பினது. (திருவே. 103-120)[4]

தல பதிகம்[தொகு]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில் வெளியேயுள்ள பெரிய நந்திக்கு பின்புறம் அமைந்த தனிக்கோயிலாகும். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[6]

போக்குவரத்து[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 60. திருேவகம்பப்படலம் (1902-2022) | 2004 வாலீச்சரம்
  2. "palsuvai.ne | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". 2016-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "shaivam.org | வாலீசம்". 2015-06-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | பக்கம்: 832.
  5. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருவேகம்பப் படலம் | பாடல்: 103-109 | பக்கம்: 587 - 591
  6. dinaithal.com | வாலீசம்.
  7. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்[தொகு]