காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம்
காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம் | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சஹஸ்ரலிங்கேசுவரர். |
காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் (சகசரலிங்கம் - ஏகம்பம்) என போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 2-ம் (மாவடிப்) பிராகாரத்தில் வாயு மூலையில் அமைந்துள்ளது. மேலும், ஆயிரத்தெட்டு இலிங்கங்களைக் தன்னகத்தேகொண்ட பேருருவலிங்கமாக அறியப்படும் இச்சிவலிங்கம் பற்றிய குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
லிங்க சிறப்பு[தொகு]
இராமன் மற்றும் இராவணனை கொன்ற தோசம் போக்குவதற்கு பூசை செய்த சிவலிங்கமாகும்.[2]
அமைவிடம்[தொகு]
இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின்காஞ்சி திருவேகம்பத்தின் மாவடிப் பிரகாரத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தை அடையலாம்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "shaivam.org |ஆயிரத்தெட்டு சிவலிங்கம் (சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்)" இம் மூலத்தில் இருந்து 2018-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180206211611/http://shaivam.org/siddhanta/sp/spt_kp_ayirathettu_sivalinga.htm.
- ↑ "palsuvai.ne | 15. ஸஹஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் 1000 சிவலிங்கம்) | காஞ்சிபுர சிவலிங்கங்கள்." இம் மூலத்தில் இருந்து 2016-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160629072139/http://www.palsuvai.net/index.php/spiritual/temples/48-kanchipuram/129-20160102-shivalinga-in-kanchipuram#oLD6rS8q4qT5tw9l.99.
- ↑ dinaithal.com | ஆயிரத்தெட்டு சிவலிங்கம் (சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்)