உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் மாசாத்தன்தளி.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மாசாத்தன்தளி.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாசாத்தன்தளீசுவரர்.

காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் (மாசாத்தன்தளி) என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

[தொகு]
  • இறைவர்: மாசாத்தன்தளீஸ்வரர்.
  • வழிபட்டோர்: சாத்தனார்.

தல வரலாறு

[தொகு]

இறைவன் திருமாலின் மோகினி வடிவில் மயங்கியபோது தோன்றிய சாத்தனார், காஞ்சியை அடைந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அத்தலமே மாசாத்தான்தளி எனப்பட்டது.[2]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு இராசவீதியில் வணிப வைசியர் தர்ம பரிபாலன சத்திரத்தையொட்டியுள்ள மண்டபத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி கச்சபேசுவரர் கோயில் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியில், இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 57. மாசாத்தன் தளிப் படலம் 1832-1868
  2. "shaivam.org | (மாசாத்தன்தளி) மாசாத்தன்தளீஸ்வரர்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  3. "shaivam.org | மாசாத்தன்தளி". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.

புற இணைப்புகள்

[தொகு]