உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் கள்ளக்கம்பம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கள்ளக்கம்பம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாயவனீஸ்வரர் .

காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் (கள்ளக்கம்பம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவரை வழிபடுவோர் கொடிய வினைமயக்கத்துள் அகப்படார். மற்றும், உலகை மயக்க விரும்பி மாயவன் பூசித்தமையால் இது கள்ளக்கம்பம் எனவாயிற்று. இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

விழிப்பட்டோர்

[தொகு]
  • மாயவன்.
  • காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் முதல் பிரகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலப்பக்கம் வெள்ளக்கம்பர், இடப்பக்கம் கள்ளக்கம்பர், ஈசானத்தில் நல்லகம்பர், என வீற்றிருக்கிறார்கள்.
  • சிவபெருமான் கச்சி மயானத்தின் கண் சைவ வேள்வி செய்து முடித்தபின்னர் சிவ சகி லலிதாதேவி என்னும் திருநாமம் கொண்டு வெளிப்பட்டு யாவும் படைக்கத் தொடங்கியபொழுது அவரது முக்கண்ணிலும் தோன்றிய மும்மூர்த்திகளுள் கள்ளக்கம்பரும் ஒருவர்.
  • பிரமனால் பூசிக்கப்பட்டவர் வெள்ளக்கம்பர்.
  • திருமாலால் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர்.
  • ருத்திரரால் பூசிக்கப்பட்டவர் நல்ல கம்பர்.[2]

தல விளக்கம்

[தொகு]
  • வெள்ளக் கம்பர் : பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினார். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றனர். (திருவே. 86)
  • கள்ளக் கம்பர் : திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)
  • நல்ல கம்பர் : உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)[3]

தல பதிகம்

[தொகு]
  • பாடல்: (கள்ளக் கம்பர்)
மருள்புரி கருத்தினான் மாயன் ஏத்தலின்
கருதும்அப் பெயரிய கள்ளக் கம்பனைத்
திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
உருகெழு கொடுவினை மைய லுட்படார்.
  • பொழிப்புரை:
திருமால் மயக்குறுத்தும் கருத்தொடும் வழிபடலால் விளங்கும் கள்ளக்
கம்பரை வணங்கும் சிறப்பினர் அச்சத்திற்குக் காரணமாகிய கொடியவினை
மயக்கத்துள் தொடக்குறார்.[4]

அமைவிடம்

[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் திருவேகம்பத்தில் உட்பிரகாரத்தில் மத்தளமாதவேசத்திற்கு அருகில் சிறிய தனி மண்டபத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரத்திலுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 60. திருேவகம்பப்படலம் (1902-2022) | 1988 கள்ளக்கம்பர்
  2. "palsuvai.net காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | பக்கம்: 832.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருவேகம்பப் படலம் | பாடல் 87 | பக்கம்: 584
  5. "shaivam.org | கள்ளக்கம்பம்". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்

[தொகு]