அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
அங்கம்பாக்கம் அம்பலவாணேச்சுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அங்கம்பாக்கம் அம்பலவாணேச்சுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | அங்கம்பாக்கம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அம்பலவாணேச்சுவரர். |
அங்கம்பாக்கம் அம்பலவாணேச்சுவரர் கோயில் உத்திர சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அங்கம்பாக்கம்[1] என்ற ஊரில் அமைந்துள்ளது.
தலவரலாறு[தொகு]
ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது.
தல சிறப்பு[தொகு]
இங்குள்ள நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் இங்கு நடைபெறுகின்றன. இத்தலத்தில் மூதாதையர்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாகக் கருதப்படுகிறது.