காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் அகத்தியேச்சரம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் அகத்தியேச்சரம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அகத்தீஸ்வரர். |
காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் (அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) எனப்போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் அமைந்துள்ளது. மேலும், அகத்திய முனிவர் வழிப்பட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
தல சிறப்பு
[தொகு]விந்திய மலையின் இறுமாப்பை அடக்க தேவர்கள் வேண்டியவாறு காசியில் வசித்திருந்த அகத்திய முனிவர் காஞ்சிக்கு வந்தபோது. அக்காஞ்சி சான்றோரையுடைத்தாய் இருக்கும் சிறப்பை நாடி இவ்விடத்தில் நாம் தேவர்கள் சொல்லியவண்ணம் வெளிபடுத்த வெண்ணியிருக்கும் இனிமையுடைய தாகிய தமிழை வெளியாக்கல் வேண்டும் என்று பூசித்தனர்.[2]
தல வரலாறு
[தொகு]விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர், ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிட்டை செய்து தொழுதார் என்பது வரலாறாகும்.[3]
தல பதிகம்
[தொகு]- பாடல்: (அகத்தியேச்சர வரலாறு)
- பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலர் இலைஞ்சித்,
- தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்,
- பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி
- ஆங்குப் பிறங்கொளியால், கண்ணிசைந்த களிசிறப்ப அகத்தியேசங்
- கண்டணைந்தாள்.
- பொழிப்புரை:
- பண்ணமைந்த பாடல் வண்டு பாடுதற் கிடனாகிய பூக்களைக் கொண்ட
- பொய்கையாகிய குளிர்ந்த சிவகங்கை எனும் ஒலிக்கும் அலைகளையுடைய
- தீர்த்தத்தில் மூழ்கித் திளைத்து பெண்ணியல்பமைந்த பேரழகினையுடைய
- பெருமாட்டியார் அங்கே விளங்கொளியால் கருத்திற்கியைந்த களி துளும்ப
- அகத்தியர் அருச்சித்த அகத்தியே சத்தினைக் கண்டு நெருங்கினர்.[4]
அமைவிடம்
[தொகு]இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்ப அகத்தில் அகத்தீசுவர மூர்த்தம் தாபிக்கப்பட்டுள்ளது.[5]
போக்குவரத்து
[தொகு]- வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும்; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2205 அகத்தியேச்சர வரலாறு
- ↑ "palsuvai.ne | 10. அகஸ்தீஸ்வரர் | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
- ↑ "shaivam.org | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | அகத்தியேச்சர வரலாறு | பாடல்: 183 | பக்கம்: 639 - 640
- ↑ dinaithal.com | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) அகத்தீசுவரர் கோயில்
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram