காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் இராமநாதேசம் | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் இராமநாதேசம் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவலிங்க மூர்த்தம் |
காஞ்சிபுரம் இராமநதீசுவரர் (இராமநாதர்) கோயில் (இராமநாதேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராமபிரான் இராவணனை சமரித்த தோசம் நீங்குவதற்கு வழிபட்ட கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
வழிப்பட்டோர்
[தொகு]இராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று செவிவழிச் செய்தியாக உள்ளது. இராவணனை அழித்த பிறகு இராமர் இராமேசுவரம் முதலான இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட ஒரு சிவலிங்கம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவின் முனையில் இராமநாதேசம் என்ற சிவத்தலம் உள்ளது.[2]
தல வரலாறு
[தொகு]இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிட்டை செய்து வழிபட்டுச் சென்றார்.[3]
தல பதிகம்
[தொகு]- பாடல்: (இராமநாதேச்சரம்)
- உரைத்ததன் குடபால் தசரதன் மதலை அரக்கனை அடுபழி
- ஒழிப்பான், அருட்குறி யிருத்திச் சேதுவில் தொழுதங் கண்ணலார்
- ஏவலிற் காஞ்சி, வரைப்பின்உற் றிராம நாதனை நிறுவி வழிபடூஉக்
- கொடுவினை மாற்றித், திரைப்புனல் அயோத்திப் புகுந்தர சளித்தான்
- சேதுவில் சிறந்ததத் தலமே.
- பொழிப்புரை:
- இதற்கு மேற்கில் இராமபிரான் இராவணனைக் கொன்ற பழி நீங்கும்
- பொருட்டுச் சிவலிங்கம் நிறுவி இராமேச்சுரத்தில் தொழுது அப்பெருமானார்
- ஆணைப்படி காஞ்சி நகரைக் கூடி இராமநாதரைத் தாபித்து அருச்சித்துத்
- துதித்துப்பாவத்தைப் போக்கி அயோத்தியை எய்தி அரசு பூண்டனர்.
- இத்தலம் சேதுவினும் சிறப்புடையதாகும்.[4]
அமைவிடம்
[தொகு]இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள சாலைத் தெருவிலிருந்து காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செல்லும் சாலையின் தொடக்கத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]
போக்குவரத்து
[தொகு]- வான்வழி:' வானூர்தி சேவை (Aviation Service) இல்லை; உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் சிரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து (Car) மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து (Train) மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து (Car) மூலமாகவும், தானியுந்து (Auto) மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ (Bus) அல்லது சீருந்துலோ (Car), காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாகவும் (75 கிலோமீட்டர்); தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து வாலாசாபாத் வழியாகவும் (40 கிலோமீட்டர்); வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து வந்தவாசி வழியாகவும் (80 கிலோமீட்டர்); தென்மேற்கில், பெங்களுரிலிருந்து வேலூர் வழியாகவும் (275 கிலோமீட்டர்) இக்கோயில் நகரை வந்தடையலாம்.[6]
இவற்றையும் காண்க
[தொகு]- திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (இராமனதீச்சரம்) நாகப்பட்டினம் மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 57. மாசாத்தன் தளிப் படலம் (1832 - 1868) | 1867 இராமநாேதச்சரம்
- ↑ "ekambaranathartemple.org திருக்கோயிலின் மூர்த்தங்கள் வரிசை - புராண வரலாறு". Archived from the original on 2016-02-14. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
- ↑ "shaivam.org | இராமநாதேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | மாசாத்தன்தளிப் படலம் | பாடல் 36 | பக்கம்: 551
- ↑ dinaithal.com | இராமநாதேசம்
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram