காஞ்சி சங்கர மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காஞ்சி சங்கர மடம் (Kanchi Sankara matha) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள், பீடாதிபதிகள், மற்ற நான்கு (சிருங்கேரி சாரதா மடம், துவாரகை மடம், கோவர்தன மடம், ஜோஷி மடம்) சங்கர மடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்றப் பட்டத்துடன் விளங்குகின்றனர்.

காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது.சிலர் இதனை சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர்[1][2]. இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் விளங்குகிறது.

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இம்மடத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வழக்கிலிருந்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

வரலாறு[தொகு]

காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்த மடத்தின் அலுவல்முறை வரலாற்றின்படி ஆதி சங்கரர் இந்த மடத்தை நிறுவியதாகவும் அவரைத் தொடர்ந்து 69ஆவது மடத்தலைவராக பொறுப்பாற்றுவதாகவும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து உள்ளதாகவும் நிறுவப்படுகிறது[3]. மடத்தின் வேறுசில பரப்புரைகளிலும் ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்று மடம் நிறுவியதாகவும் இங்கு மரணமடைந்ததாகவும் அறியப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. [4]

வேறு சிலர் இந்த மடம் அண்மையில் 18ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக நிறுவப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது என்கின்றனர். [5][6] கும்பகோணத்தில் இருந்த மடத்தலைவர்கள் காஞ்சி காமாட்சி கோவிலின் நிர்வாகத்தை கைக்கொள்ளவே தங்கள் மடத்தை 1842க்கும் 1863க்கும் இடையில் காஞ்சிக்கு இடம் பெயர்த்தனர். இதுவே காஞ்சி மடத்தின் துவக்க காலம் என்றும் கூறுகின்றனர்.[7]

காஞ்சி மடத்தின் கூற்றின்படி 18ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்ததற்கான காரணம் அய்தர் அலியின் படையெடுப்பு ஆகும். மேலும் அவர்கள் ஆதி சங்கரர் வந்தமைக்கும் மடம் 2500 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டிருப்பதற்கும் காஞ்சியைச் சுற்றியுள்ள கோவில்களில் கல்வெட்டுகள் தொல்லியல் சான்றுகளாக உள்ளதாக கூறுகின்றனர். மடத்தின் கூற்றுப்படி காஞ்சியிலுள்ள சன்னிதி கோவில் தெருக்கட்டிடம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக நிறுவப்பட்டாலும் இதனை மறுப்போரும் உள்ளனர்.

சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக பல்லாணடுகள் இருந்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://archive.org/details/KanchiMathTamilRefutation
  2. https://archive.org/details/KanchiKamakotiMathAMyth
  3. [1]
  4. [2] [3]
  5. The Curious Case of the Missing Monk, The Illustrated Weekly of India, issue dated September 13, 198
  6. history of the Kanchi math
  7. Mattison Mines, Vijayalakshmi Gourishankar, Leadership and Individuality in South Asia: The Case of the South Indian Big-Man, Journal of Asian Studies, Vol. 49, No. 4 (Nov., 1990), pp. 761-786.
  8. ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வரலாறு http://www.srikanchimahaswami100.org/SriMahaSwamyCharitram__2__1_edit.pdf

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_சங்கர_மடம்&oldid=2980908" இருந்து மீள்விக்கப்பட்டது