இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராமநாதசுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
ஆள்கூறுகள்: 9°17′17″N 79°19′02″E / 9.288106°N 79.317282°E / 9.288106; 79.317282
பெயர்
பெயர்: இராமநாதசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
அமைவு: இராமேஸ்வரம்
கோயில் தகவல்கள்
மூலவர்: இராமநாதசுவாமி: சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: unknown
அமைத்தவர்': பாண்டிய வம்சம்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

தல வரலாறு[தொகு]

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு ராம ஈஸ்வரம் என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

கோயில் அமைப்பு[தொகு]

தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்:[தொகு]

வ.எண் தீர்த்தங்கள் விபரம் வ.எண் தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம் 12 கெந்தமாதன தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம் 13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம் 14 கங்கா தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம் 15 யமுனா தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம் 16 கயா தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம் 17 சர்வ தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம் 18 சிவ தீர்த்தம்
8 நள தீர்த்தம் 19 சாத்யாமமிர்த தீர்த்தம்
9 நீல தீர்த்தம் 20 சூரிய தீர்த்தம்
10 கவய தீர்த்தம் 21 சந்திர தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம் 22 கோடி தீர்த்தம்

குட முழுக்கு[தொகு]

இராமேஸ்வரம் கோயிலின் முதல் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) 1948இல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது குடமுழுக்கு 1975இலும், மூன்றாவது குடமுழுக்கு 2001இலும் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த குடமுழுக்கான நான்காவது குடமுழுக்கு பிப்ரவரி 2015இல் நடைபெறவுள்ளது. [1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]