தஞ்சாவூர் சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் சிவாஜி போன்சலே
மராத்திய அரசின் கடைசி மன்னர்
தஞ்சாவூர் சிவாஜி போன்சலே
ஆட்சி1832–1855
முடிசூட்டு விழா17 மார்ச் 1832, அரசவை மண்டபம், தஞ்சாவூர் கோட்டை, தஞ்சாவூர்
அரச குலம்போன்சலே
தந்தைஇரண்டாம் செர்போஜி
பிறப்புதஞ்சாவூர்
இறப்பு29 அக்டோபர் 1855
சதர் மகால், தஞ்சாவூர் கோட்டை, தஞ்சாவூர்
சமயம்இந்து சமயம்

தஞ்சாவூர் சிவாஜி (Shivaji of Thanjavur) (மராத்தி: तंजावरचे शिवाजी) (ஆட்சிக் காலம் 17 மார்ச் 1832 – 29 அக்டோபர் 1855) சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தில் பிறந்தவர். இவரே தஞ்சாவூர் மாரத்திய அரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவினார்.

29 அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் சிவாஜி மன்னர் ஆண் வாரிசு இன்றி இறந்தார். எனவே இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் மராத்திய அரசை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_சிவாஜி&oldid=3599111" இலிருந்து மீள்விக்கப்பட்டது