விசயேந்திர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயேந்திர சரசுவதி
காஞ்சி விசயேந்திர சரசுவதி
பிறப்பு13 மார்ச்சு 1969 (1969-03-13) (அகவை 54)
பெரியபாளையம், திருவள்ளூர்
இயற்பெயர்சங்கர நாராயணன்
தேசியம்இந்தியன்
சமயம்இந்து

விசயேந்திர சரசுவதி அல்லது சிறி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பவர் (Sri Vijayendra Saraswati Swamigal 1969, மார்ச் 13), காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் (இளைய பீடாதிபதி) ஆவார்.

பிறப்பு[தொகு]

சங்கரநாராயணன் எனும் இயற்பெயராக கொண்டுள்ள இவர், தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள "தண்டலம்" எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, [[மார்ச் 08] இல் பிறந்தவர்.[1]

பட்டம்[தொகு]

விசயேந்திர சரசுவதி, 1983 ஆம் ஆண்டு மே 29 இல் தனது 14 ஆவது அகவையில், அவரது முன்னைய 69 ஆவது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதியான, செயந்திர சரசுவதி என்பவரின் (வாரிசாக) 70 ஆவது இளைய பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றுக்கொண்டார்.[2]

சிறப்புகள்[தொகு]

 • இவர் பீடாதிபதி பட்டம் ஏற்ற உடனேயே சிறி சகத்குரு சந்திரசேகர சரசுவதி பற்றிய பத்து சுலோகம் அடங்கிய தசகம்[3] ஒன்றை எழுதினார்.
 • இவர் வயோதிகம் அடைந்த தாயையும், தந்தையையும், மற்றும் பெரியோரையும் மதித்துப் பணியும்போதுதான் ஆன்மீகம் ஆரம்பமாகின்றது என்றவர்.
 • 2010 ஆம் வருடம், மே மாதம் 20 ஆம் நாள், சிறி விசயேந்திர சரசுவதி சுவாமிகள், காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகரும்பூர் எனும் கிராமத்தில் உள்ள சிவாலயத்திற்கு சென்றபோது, 10 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்.

சர்ச்சைகள்[தொகு]

காஞ்சிபுரம் கோயில் நிர்வாகி சங்கரராமன் கொலைவழக்கில், காஞ்சி சங்கர மடம் இளைய மடாதிபதி விசயேந்திர சரசுவதியை 25 ஆவது குற்றவாளியாக கருதி, 2005, சனவரி 10 ஆம் நாள் திங்கட்கிழமை அன்று காஞ்சி சங்கரமடத்தில் வைத்து தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.[4] புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து விசயேந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார்.[5][6]சினிமா நடிகை சுவர்ணமால்யாவோடு இவரும், இவரது தம்பியும் தொடர்பிலிருந்ததாக போலீசார் துப்பறிந்து விசாரித்தனர்[7]

பிப்ரவரி 2021 அன்று ராமேசுவரம் கோயில் ஆகம விரோதமாக கருவறை நுழைவுப்போராட்டம் விசயேந்திரர் தலைமையில் நடைபெற்றது[8]. இதில் குருமூர்த்தி மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்று வெற்றிகரமாக நுழைந்து பூஜைகளை நடத்தினர். அன்று அங்குள்ள படிக லிங்கம் உடைந்தது, விசயேந்திரரால்தான் என்றும், அவரே திருடிச்சென்றார் என்றும் பேச இது காரணமாயிற்று[9].

மேற்கோள்கள்[தொகு]

 1. "vijayendra-saraswati-swamigal-biography". www.charanamrit.com (ஆங்கிலம்). www.charanamrit.com. http://www.charanamrit.com/guru/vijayendra-saraswati-swamigal-biography-94. பார்த்த நாள்: 2016-09-026. 
 2. "V S S (70th Pontiff Of Sri Kanchi Kamakoti Peetam)". www.arunachala-ramana.org (ஆங்கிலம்). November 02, 2010, 01:00:32 PM. http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=6301.0. பார்த்த நாள்: 2016-09-026. [தொடர்பிழந்த இணைப்பு]
 3. - எழுதிய தசகம்-வெளியிடு:19-05-2015, 06:51 AM
 4. பிபிசி தமிழ்|27 அக்டோபர், 2005 - பிரசுர நேரம் 13:59 ஜிஎம்டி
 5. காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை. பிபிசி தமிழ். 27 நவம்பர் 2013. https://www.bbc.com/tamil/india/2013/11/131127_kanchicase. 
 6. சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை. தினமலர் நாளிதழ். 27 நவம்பர் 2013. https://m.dinamalar.com/detail.php?id=859451. 
 7. https://m.timesofindia.com/the-heat-is-now-on-the-junior-pontiff/articleshow/956253.cms
 8. "Kanchi pontiff performs rituals at Rameswaram". https://www.thehindu.com/news/national/tamil-nadu/kanchi-pontiff-performs-rituals-at-rameswaram/article33908501.ece/amp/. 
 9. "Rameshwaram Ramanathaswamy Temple, Shiva Lingam, ராமேசுவரம் ராமநாதசாமி கோவில், சிவலிங்கம்" (in Tamil). https://www.maalaimalar.com/amp/devotional/worship/2021/02/25133601/2385764/Rameshwaram-Ramanathaswamy-Temple-lingam.vpf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயேந்திர_சரசுவதி&oldid=3702996" இருந்து மீள்விக்கப்பட்டது