செயந்திர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'செயந்திர சரசுவதி அல்லது ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் (பிறப்பு ஜூலை 18, 1935-சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்) 69 வது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதி.

இயற்பெயர்[தொகு]

சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு[தொகு]

இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக அமெரிக்கா நாட்டில் வாழ்பவர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.

தடைச்சட்டம்[தொகு]

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.

குற்றச்சாட்டு[தொகு]

நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றம் இவரது பிணை விடுவிப்பு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.[1]

ஊடகங்களின் பரபரப்பு[தொகு]

கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் (தினமணி , நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிடத்தக்க ஒரு சில நடுநிலை ஊடகங்கள் தவிர) மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது. ஊடகங்களின் செயல்பாடுகளை ஆந்திர நீதிமன்றமும் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி துவக்கம்[தொகு]

தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்பது செயந்திர சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை
  2. ஆன்மிக அரசியல் கட்சியை தொடங்கினார், ஜெயேந்திரன் - கீற்று இணையதளம்

வெளி இணைப்புகள்[தொகு]

Religious titles
முன்னர்
சந்திரசேகர சரசுவதி
காஞ்சி சங்காரச்சார்யர்
சனவரி 8, 1994 –
பதவியில் உள்ளார்
Heir:
Vijayendra Saraswati Swamigal
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயந்திர_சரசுவதி&oldid=2210570" இருந்து மீள்விக்கப்பட்டது