பேச்சு:செயந்திர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு ஆங்கில கட்டுரையின் தமிழாக்கமே இதன் தலைப்பு அந்தக் கட்டுரையைப் பார்த்து வைக்கப்பட்டது. வேறு மாதிரி வைத்துக்கொள்ளலாம். இதை மேலும் தொகுக்கலாம். நிழற்படம் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டது.--செல்வம் தமிழ் 01:38, 3 மார்ச் 2009 (UTC)

கொலை வழக்கு சம்பந்தப்பட்ட படம் இங்கு அனுமதிக்கலாமா? இது பற்றி சுந்தர் போன்றவர்கள் தான் பதில் தர வேண்டும். என்னைப் பொருத்தவரையில் இப்படம் இங்கு தேவையற்றது. படம் இணையத்தில் இருந்து எடுத்ததாகத் தெரிவிக்கிறீர்கள். காப்புரிமையற்றதா?--Kanags \பேச்சு 10:07, 5 மார்ச் 2009 (UTC)
கொலைவழக்கு தொடர்பிலான செய்திகளையோ படத்தையோ தருவதில் தவறில்லை. ஆனால், இந்தப்படம் காப்புரிமைக்குட்பட்டது. இதை முதற்கண் பதிவேற்றியிருக்கக் கூடாது. செல்வம், {{PD-self}}அளிப்புரிமை உங்கள் சொந்த ஆக்கங்களைத் தருவதற்கானது. இணையத்திலிருந்து பெற்றால் அந்த இணைய தளத்தின் காப்புரிமைக்குட்பட்டதாகும். -- சுந்தர் \பேச்சு 14:51, 5 மார்ச் 2009 (UTC)

இந்தக் கட்டுரை பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் என பகுக்கப்பட்டுள்ளது. அதற்கான உரையடக்கம்/விளக்கம் கட்டுரையில் இல்லை. எந்த அரசியல் இயக்கத்திலும் உறுப்பினராகவோ தனிப்பட்ட முறையில் அரசியலில் ஈடுபட்டதாகவோ குறிப்புகள்/மேற்கோள்கள் இல்லை. --மணியன் 04:48, 7 ஏப்ரல் 2011 (UTC)